கெகிராவ - மரதன்கடவல பகுதியில் தாய் மற்றும் பிள்ளை கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 37 வயதான தாய் மற்றும் 6 வயதான பிள்ளை ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

மரண வீடொன்றுக்கு சென்றிருந்த நிலையிலேயே குறித்த இருவரும் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.