கிழக்கின் சுற்றுலா மையம் (Eastern Tour Hub) அமைப்பின் Tailoring & Fashion Designing-100 செயற்றிட்டமானது கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை IHS Vocational Campusஇல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கிழக்கிலங்கையில் தையல்துறையில் ஆர்வமுள்ள யுவதிகளினது வருமானத்தை அதிகரிப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு அவர்களுக்கான தொழில்வாய்ப்பினையும் சமூக அந்தஸ்தையும் உருவாக்கிக் கொடுக்கும் நோக்குடன் Eastern Tour Hub செயற்றிட்டத்தினூடாக IHS Vocational Campusஇன் செயற்படுத்தலின் மூலம் SF Garment Group of Companyஇன் அனுசரணையுடன் தொழில் முனைவோருக்கான நேர்முகத் தேர்வு இதன்போது இடம்பெற்றது.
இந்நேர்முக தேர்வில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதுடன் அதில் 100 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் விதிமுறைக் கடிதம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அதிதிகளாக ஈஸ்டர்ன் டுவர் ஹப்பின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் A.R.M.சர்ஜூன், IHS Vocational Campusஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி A.A.A. அஃப்ரி, SF Garment Group of Companyயின் தவிசாளர் மொகமட் சுக்ரி, IHSV Campusஇன் நிறைவேற்று அதிகாரி M.M.நவாஸ், Techlink Technology Campusஇன் பிரதான நிறைவேற்று அதிகாரி பாதிமா ரின்ஷா , IHSV Campusஇன் பதிவாளர் நஸீமா பானு, SRN Savummiya Products நிறுவனத்தின் தவிசாளர் எஸ். சௌமியா மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM