இலங்கை அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீர அவுஸ்திரேலியாவில் பயிற்சி வழங்குவற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை 20 வருட தடை விதித்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் வீரரின் முற்றிலும் கண்டிக்கத்தக்க நடத்தைக்காக 20 வருட தடையை விதித்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை துலிப் சமரவீர அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்குள்ளும் மாநில சபைகள் மற்றும் கழகங்களிலும் எந்த பதவியையும் வகிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார் என தெரிவித்துள்ளது.
52 வயது துலிப் சமரவீர விக்டோரியா கிரிக்கெட்டின் ஊழியராக பணியாற்றியவேளை அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் விதிமுறைகளை மீறியமை விசாரணைகளின்போது உறுதியாகியுள்ளது.
முறைப்பாடுகள் கிடைத்ததை தொடர்ந்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மை திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இந்த விசாரணைகளின் முடிவை அடிப்படையாக வைத்து கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஒழுக்காற்று விதிமுறைகள் ஆணைக்கு 20 வருட தடையை அறிவித்துள்ளது.
இலங்கை அணிக்காக 1993 முதல் 1995 வரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சமரவீர நீண்டகாலமாக விக்டோரியாவின் பெண்கள் அணியினதும், மெல்பேர்ன் ஸ்டார் டபிள்யூ பிபிஎல்லின் பயிற்றுவிப்பாளராக பணிபுரிந்த பின்னர் விக்டோரியா பெண்கள் அணியின் சிரேஸ்ட பயிற்றுவிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார்.
எனினும், இரண்டு வாரங்கள் மாத்திரமே அந்த பதவியை வகித்த நிலையில் அரசின் கொள்கைகள் காரணமாக தனது ஊழியருக்கு செய்ய விரும்பிய நியமனம் மறுக்கப்பட்டதால் அவர் பதவி விலகினார்.
எனினும், இந்த விடயத்திற்கும் அவர் மீதான குற்றச்சாட்டிற்கும் தொடர்பில்லாதது குறிப்பிடத்தக்கது.
சமரவீர தகாத நடத்தையில் ஈடுபட்டார். இதன் மூலம் ஒழுக்கக்கோவைகளை மீறினார் என கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஆணைக்குழு விசாரணைகளின்போது கண்டுபிடித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM