அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தகவல்களை ஹக்செய்த ஈரான் அதனை ஜோபைடனின் பிரச்சார குழுவிற்கு அனுப்பியது என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடன் போட்டியிட்டவேளை ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரகுழுவின் தகவல்களை திருடி வேண்டுகோள் விடுக்கப்படாத மின்னஞ்சல்களை பைடனின் பிரச்சாரத்துடன் தொடர்புடையவர்களிற்கு அனுப்பினார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பைடனின் பிரச்சார குழுவின் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்தார்கள் 2024 ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயன்றார்கள் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
ஈரான் ஹக்கிங்கில் ஈடுபட்டு முக்கியமான தகவல்களை திருடியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருந்த எவ்பிஐ இன்று ஈரானே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது என உறுதி செய்துள்ளனர்.
ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பைடனின் பிரச்சார குழுவில் உள்ளவர்கள் பதிலளித்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானை சேர்ந்த ஹக்கர்கள் தங்களை தொடர்புகொண்டதாக தெரிவித்துள்ள பல ஊடக நிறுவனங்கள் தாங்கள் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM