தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் பிற்பகல் 4.00 மணிவரை ஐந்து புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் ஒரு சாதனை சமப்படுத்தப்பட்டது.
இதேவேளை வட மாகாண பாடசாலை ஒன்றுக்கு நேற்றைய தினமும் ஒரு தங்கப் பதக்கம் சொந்தமானது.
18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியின் அருந்தவராஜா புவிதரன் (4.20 மீற்றர்) முன்னைய சாதனையை சமப்படுத்தி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் சிவகுமார் கபில்சன் (4.10 மீற்றர்) மற்றும் கதிர்காமலிங்கம் கேதுஷான் (4.00 மீற்றர்) ஆகியோர் முறையே வெள்ளி வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இப் போட்டியில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களே முதல் ஆறு இடங்களைப் பெற்றனர்.
ஆர். யதுசன் (4.00 மீ. அருணோதயா)இ என். பானுஜன் (3.70 மீ. சாவகச்சேரி இந்து)இ ஜே. நீல் ஜான்சன் (3.00 மீ. மகாஜன) ஆகியோர் முறையே 4ஆம்இ 5ஆம்இ 6ஆம் இடங்களைப் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM