சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அந்நாட்டின் போக்குவரத்து, விநியோகச் சேவைகள் அமைச்சருடன் சந்திப்பு  

19 Sep, 2024 | 11:26 AM
image

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் சவூதி அரேபியாவின் போக்குவரத்து மற்றும் விநியோகச் சேவைகள் அமைச்சர் பொறி. ஸாலிஹ் பின் நாஸர் அல் ஜாஸிரை கடந்த 12ஆம் திகதி சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது தூதுவர் அமீர் அஜ்வத்தை வரவேற்ற அமைச்சர் ஸாலிஹ் அல் ஜாஸிர் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பினை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் பல்வேறு வகைகளிலும் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துரைத்த தூதுவர் அமீர் அஜ்வத் சவூதி அரேபிய பிரஜைகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முடிவானது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என்பதை வலியுறுத்தியதுடன், இலங்கைக்கான சவூதி எயார் லைன்ஸின் சேவைகளை மீளவும் ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

மேலும் இதன்போது இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரு நாடுகளுக்கும் இடையிலான தினசரி சேவைகளை மேற்கொள்வதற்கு சிவில் விமான போக்குவரத்துக்கான பொது அதிகார சபை (GACA) வழங்கி வருகின்ற தாராளமான ஆதரவுக்கும் தூதுவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். 

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழி மற்றும் கடல்வழித் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இக்கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது.

அமைச்சர் ஸாலிஹ் தற்போதும் பல கவுன்சில்கள் மற்றும் குழுக்களுக்கு தலைமை தாங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

அந்த வகையில் அவர் சிவில் விமான போக்குவரத்துக்கான பொது அதிகார சபை, சவூதி எயார்லைன்ஸ் (SAUDIA), பொதுப் போக்குவரத்து அதிகார சபை, சவூதி துறைமுக அதிகார சபை மற்றும் சவூதி ரயில்வே கம்பெனி (SAR) போன்ற பல்வேறு நிறுவனங்களின் தலைவராக பணியாற்றுவதுடன் கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் விநியோகத் திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.

இந்நிகழ்வின்போது தூதுவர் அவர்களுடன் இலங்கை தூதரகத்தின் அமைச்சர் / தூதரகப் பிரதானி மொஹமட் அனஸும் கலந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலை சந்தித்து கலந்துரையாடினார் இந்திய உயர்ஸ்தானிகர்...

2025-01-16 10:01:33
news-image

இந்திய மீனவர்கள் 6 பேர் விடுதலை 

2025-01-16 09:55:04
news-image

யாழ். வடமராட்சியில் இருவரிடம் தொலைபேசி ஊடாக...

2025-01-16 10:12:56
news-image

ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு நீதியாக...

2025-01-16 10:11:56
news-image

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு

2025-01-16 09:41:51
news-image

சீனாவில் நடைபெறும் அரச மற்றும் தனியார்...

2025-01-16 09:37:39
news-image

கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல்...

2025-01-16 09:06:10
news-image

நெல்லுக்கான உத்தரவாத விலைக்கான வர்த்தமானி அடுத்த...

2025-01-16 09:02:24
news-image

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு ;...

2025-01-16 09:04:09
news-image

சுகாதார சேவையில் சகல ஊழியர்களுக்கும் தமது...

2025-01-16 09:15:47
news-image

ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்துவதன்...

2025-01-16 09:10:16
news-image

இன்றைய வானிலை

2025-01-16 06:09:53