(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடுநிலையான ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் மிக இலகுவாக ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவை முதல் தடவையாக வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.
பஸால்ஹக் பறூக்கி, 18 வயதுடைய அல்லா மொஹமத் கஸன்பார் ஆகிய இருவரும் துல்லியமாக பந்துவீசி தம்மிடையே 7 விக்கெட்களைப் பகிர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
தென் ஆபிரிக்காவின் வழமையான அணித் தலைவர் டெம்பா பவுமா சுகவீனமுற்றதால் பதில் தலைவராக ஏய்டன் மார்க்ராம் நியமிக்கப்பட்டிருந்தார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 33.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பத்து ஓவர்கள் நிறைவில் தென் ஆபிரிக்கா 7 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், வியான் முல்டர், 8அவது விக்கெட்டில் பிஜோன் போர்ச்சுய்னுடன் 39 ஓட்டங்களையும் 9ஆவது விக்கெட்டில் நண்ட்ரே பேர்கருடன் 30 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.
வியான் முல்டர் 52 ஓட்டங்களையும் பிஜோன் போர்ச்சுய்ன் 16 ஓட்டங்களையும் டொனி டி ஸோர்ஸி 11 ஓட்டங்களையும் கய்ல் வெரின் 10 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களை விட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெறவில்லை.
பந்துவீச்சில் பஸால்ஹக் பறூக்கி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அல்லா மொஹமத் கஸன்பார் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரஷித் கான் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 26 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (25 ஆ.இ.), குல்பாதின் நய்ப் (34 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.
அவர்களைவிட ரியாஸ் ஹசன், அணித் தலைவர் ஹஸ்மத்துல்லா ஷஹிதி ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் பிஜோன் போச்சுய்ன் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM