(நெவில் அன்தனி)
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, அதனைத் தக்கவைக்கும் முனைப்புடன் பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பிக்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
ஆறு மாதங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்துவரும் இந்தியா, இந்த டெஸ்ட் தொடருடன் அடுத்த மூன்றரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறாமல் இருந்த பங்களாதேஷ், அண்மையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தடவையாக வெற்றிபெற்ற சூட்டோடு இந்தியாவை வீழ்த்தும் குறிக்கோளுடன் இந்தத் தொடரை எதிர்கொள்கிறது.
அதேவேளை, சில கால இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ள இந்தியா, தனது வெற்றிக் கணக்கை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 14ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டிய பங்களாதேஷ், இந்தியாவுக்கு எதிராகவும் 14ஆவது போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுவரை இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அவற்றில் 11 டெஸ்ட்களில் தோல்விகளைத் தழுவியுள்ளது. மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.
இந்தியாவில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தியா கடந்த 10 வருடங்களில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரிலும் இந்தியா தோல்வி அடையவில்லை.
இந்தத் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இந்தியா முயற்சிக்கும் அதேவேளை, பங்களாதேஷ் பலத்த சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி முழு பலத்துடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை முன்னிட்டு விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரிஷாப் பான்ட் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விராத் கோஹ்லி கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் ராகுல் விளையாடியிருந்தார்.
2022இல் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷாப் பான்ட், கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட தயாராகிறார். இதனிடையே இந்த வருடம் ஐபிஎல், சர்வதேச ரி20, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இவர்கள் மூவரும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெறுவதன் மூலம் அணி மேலும் பலமடையும் என நம்பப்படுகிறது.
அணிகள்
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா.
பங்களாதேஷ்: ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத், ஹசன் மஹ்முத், நாஹித் ரானா அல்லது தய்ஜுல் இஸ்லாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM