பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது திருகோணமலை குதங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார். எனினும் எட்கா குறித்தான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

Image result for நளின் பண்டார virakesari

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு பிரச்சினைக்கு முன்னைய ஆட்சியும் நல்லாட்சியும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.