தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கமும் ஜனாதிபதிக்கு ஆதரவு!

Published By: Vishnu

18 Sep, 2024 | 09:37 PM
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு தனது ஆதரவு வழங்குவதாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று (18) பிற்பகல் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னி மக்கள் மனப்பாங்கை அறிந்த நிலையிலே இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்த அவர், வன்னி மக்களின் பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், முழுநாட்டு மக்களினதும் விருப்பத்திற்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற இருக்கிறார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் விருப்பத்தையும் இங்கு வெளியிட வேண்டும். மூன்று பிரதான வேட்பாளர்களில் அதி கூடிய தகைமைகளையும் ஆளுமையையும் அனுபவத்தையும் கொண்டவர் ரணில் விக்ரமசிங்க ஒருவர் தான். அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.  

நாட்டுக்கு அரசியல் பொருளாதார ஸ்தீரத்தன்மை அவசியம். ரணில் விக்ரமசிங்க தான் நாட்டுக்கு விடிவைப் பெற்றுக் கொடுத்தார். இந்த ஸ்தீர நிலைமை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூட அறிவித்துள்ளது. இப்போதுள்ள சமூக நிலை தொடர வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள ஜனாதிபதி தொடர்ந்து ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.

மரதனோட்டப் பந்தயத்தில் பாதியை கடந்து வந்துள்ள நிலையில்  ஓட்டத்தை மாற்றினால் புதிதாக வரும் தலைவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓட நேரிடும். எனவே, எஞ்சிய தூரத்தை ஜனாதிபதியினால் தான் இலகுவாக ஓடி முடிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்

சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் முடிவு  தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடல்ல. அது எம்.ஏ. சுமந்திரனின் தனிப்பட்ட நிலைப்பாடு மாத்திரமே. கட்சியிலுள்ள பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் முடிவிலே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அண்மையில் மன்னாருக்கு வருகை தந்த போது சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்தார். இதன் போது மன்னார் மக்களின் ஆதரவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், யதார்த்த அரசியலை விளங்கிய அனைவரும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் கைகோர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56