காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பில் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்!

18 Sep, 2024 | 07:38 PM
image

(எம்.நியூட்டன்) 

காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (18)   நடைபெற்றது.  

உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள  ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இந்திய முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்கள்.

நிதி மூலம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான காணி கோரிக்கை, மூலப்பொருட்களின் இறக்குமதி, விற்பனை செயற்பாடுகள், செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கால எல்லை, சுற்றாடல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய முழுமையான முன்மொழிவு திட்டத்தை விரைவாக சமர்பிக்குமாறு தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், உரிய நடைமுறைகளை பின்பற்றி அதனை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன், ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலொன் மஸ்க்கினால் நிறுத்தப்பட்ட திட்டங்களில் இலங்கை...

2025-02-13 17:40:39
news-image

அஹுங்கல்ல கடலில் மூழ்கிய இரு வெளிநாட்டுப்...

2025-02-13 17:24:17
news-image

காணாமல்போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி...

2025-02-13 17:14:25
news-image

சிகிரியாவில் குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண்...

2025-02-13 17:42:52
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்!

2025-02-13 17:39:48
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-13 17:01:09
news-image

அமிர்தலிங்கத்தைப்போன்ற ஆளுமையுள்ள தலைவர் எமக்கு கிடைக்கப்போவதில்லை...

2025-02-13 17:38:54
news-image

இம்மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல்...

2025-02-13 17:38:24
news-image

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல்...

2025-02-13 16:55:46
news-image

மின்சார துண்டிப்பு - திருமண மண்டப...

2025-02-13 16:37:11
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-13 16:25:44
news-image

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

2025-02-13 15:52:58