ஏற்கக்கூடிய அரசாங்கத்தை அணுகாமைக்கான மூன்று காரணங்களை வெரிட்டே ரிசர்ச் அடையாளம் காட்டுகிறது

18 Sep, 2024 | 05:24 PM
image

கடந்த 50 வருடங்களுக்கு அதிகமாக அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் அனைத்து ஜனாதிபதிகளும் நடைமுறைக்கு சாத்தியமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையையே பின்பற்றி வந்துள்ளனர். இந்த நிலைமையானது நெறிப்படுத்தப்பட்ட அரசாங்கம் ஒன்றிற்கான மாதிரி வடிவம் ஒன்றை உருவாக்குவதற்கு வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தை தூண்டியுள்ளது. ஆனால் மேலும் பகுத்தரிவுடையதாக அதாவது ஏற்றுக்கொள்ள கூடியதாக அரசாங்கத்தை எவ்வாறு உருவாக்குவது?

ஏற்றுக்கொள்ளகூடிய அரசாங்கம் ஒன்றை அணுகாமைக்கான மூன்று காரணங்களை வெரிட்டே ரிசர்ச் வெளிக்கொணர்ந்து அடையாளம் காட்டுகின்றது. அதாவதுஅமைச்சரவை அமைச்சுக்கள் மற்றும் அதன் பணிகளை உயர் மட்டத்தில் பேணுவதற்காக மூன்று விடயங்களை பிரதானமாக அவதானிக்க வேண்டும் (01) தவறான சீரமைப்பு (ஒவ்வாமை) (02) அத்தியாவசிமற்ற பகிர்வு மற்றும் (03) உறுதியற்றதன்மை.

தவரான சீரமைப்பு அல்லது ஒவ்வாமை என்பதை அவதானித்தால், ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற அதாவது ஒவ்வாத விடங்களை ஒரே அமைச்சின் கீழ் ஒன்றாக ஒரு குழுவாக இயக்கிவருகின்றமையாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அஞ்சல் மற்றும் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம்  மத விவகார அமைச்சு. 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டசுற்றுலா அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியன சிறந்த உதாரணங்களாகும்.

அத்தியாவசியமற்ற பகிர்வு அல்லது பிளவுபட்டு காணப்படுதல் தொடர்பில் அவதானம் செலுத்தினால் மிகவும் அண்மித்த தொடர்புகளை கொண்ட விடயவிதானங்கள் வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் கட்டமைக்கப்படுவது பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது. உதாரணமாக கடந்த 2019ஆம் ஆண்டில் நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு, வனவிலங்கு மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, கால்நடை வளங்கள் அமைச்சு, விவசாய அமைச்சு, சிறு ஏற்றுமதி பயிர்கள் அமைச்சு,சீனிக் கைத்தொழில் அபிவிருத்திஅமைச்சு மற்றும் தென்னை அபிவிருத்தி அமைச்சு என 09 அமைச்சுக்கள் தனித்தனியாக இயங்கியமை.

மூன்றாவதாக உறுதியற்ற தன்மைஅல்லது ஸ்திரமற்ற தன்மை என்பது அமைச்சுக்கள் அவற்றின் கட்டமைப்பில் அல்லது கூறுகளில் அடிக்கடி மேற்கொள்ளும் மாற்றங்களை குறிக்கின்றது. அதாவது அமைச்சுக்களின் விடயங்கள் மற்றும் பொறுப்புக்கள் பல்வேறு வழிமுறைகளில் ஒன்றிணைக்கப்பட்டு மறுசீரமைக்கப்படுவதன் வாயிலாக அமைச்சுக்களின் தலைப்புக்களில் அல்லது பிரதான விடயங்களில் கொண்டுவரப்படும் மாற்றங்களை இது குறிக்கின்றது.

இலங்கையில் இந்த மூன்று பிரச்சினைகளும் இருவேறு கட்டங்களில் நடைபெறுகின்றன. உதாரணமாக சர்வதேச வர்த்தகம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கியது. உயர்கல்வி மற்றும் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு அபிவிருத்திக்கான மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கியது.

அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களினாலும் மேற்குறிப்பிட்ட மூன்று பிரச்சினைகளும் இரண்டாவது கட்டத்தில் நடைபெறுகின்றன.

உதாரணமாக கடந்த 2015ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார தொடர்புகள் மற்றும் வர்த்தக கலந்துரையாடல்கள் வாயிலாக மாத்திரம் பரிவர்த்தனைகளை அதாவது கொடுக்கல் வாங்கள்களை மேற்கொண்டு வந்த வர்த்தக திணைக்களம் (சாதாரணமாக சர்வதேச வர்த்தகம் அல்லது வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கிய) உள்ளக பொருளாதார கொள்கையினூடாக மாத்திரம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கீழ் அதிகாரப்படுத்தப்பட்டமை.

2010 மற்றும் 2023 ஆண்டு காலப்பகுதிகளுக்கிடையில், நிறுவனங்கள் உள்ளிட்ட அமைச்சுக்களிலுள்ள அமைப்பு மற்றும் அதற்குரிய சட்டங்கள் குறைந்தபட்சம் 111 வர்த்தமானிகளால் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அனைத்து வர்த்தமானி அறிவித்தல்களும் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.

இவ்வாறானவிடயங்கள் தொடர்ச்சியாகநிகழ்வதனால் அரசாங்கத்திற்குள் செயலிழக்கும் நிலை உருவாவதோடு,அரசாங்கத்திடம் இருந்து பொதுமக்கள் தேவையானசேவையை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளைஎதிர்கொண்டுகுழப்பநிலைக்கு உள்ளாகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 10 தடவைகள் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் மாற்றப்பட்டமை இதற்கான உதாரணமாகும். நடைமுறைக்கு ஏற்புடையதா என்பதனை பொருட்படுத்தாமல் மேற்கொண்டசெயல்பாடே இதுவாகும். கடந்த 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குடிவரவு குடியகல்வு திணைக்களமானது உள்நாட்டு அலுவல்கள் வயம்ப அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழும், கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மஹாவெலி விவசாயம் நீர்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் கீழும் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏன் இவ்வாறு நடக்கின்றது? அடையாளப்படுத்தக்கூடிய இரு காரணங்கள் காணப்படுகின்றன. முதலாவது! தேவைக்குஅதிகமாக,நாடாளுமன்ற உறுப்பினர்களைஅமைச்சுப் பதவிகளுக்குள் உள்வாங்குவது. இந்தநடவடிக்கை வெறுமனே அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மாத்திரமின்றி, அமைச்சுக்களின் பிரதான செயற்பாடுகள் மற்றும் கட்டமைப்புக்களில் பிளவுகளைஏற்படுத்தவும் வழிவகுக்கின்றது. 

இதற்கு முன்னர் ஒரு சந்தரப்பத்தில் (2014 நவம்பர் மாதம்) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றஉறுப்பினர்கள் 225 பேரில் அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் உள்ளிட்டஅமைச்சர்களின் எண்ணிக்கை 108ஆக காணப்பட்டது. இரண்டாவது காரணமாக இங்கு குறிப்பிடப்படுவது என்னவென்றால், அமைச்சர்களாக தெரிவுசெய்யப்படுபவர்களின் விசேட அபிலாசைகளுக்கு இடமளிப்பதாகும். 

கடந்த 2015ஆம் ஆண்டு அமைச்சர் ஒருவர் நிதி அமைச்சராக கடமையாற்றியதன் பின்னர் வெளிவிவகார அமைச்சராகவும் கடமையாற்றியிருந்தார். அது மாத்திரமின்றிதேசியலொத்தர் சபையானது வெளிவிவகார அமைச்சின்  கீழ் மாற்றப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இது போன்ற விடயங்கள் பொதுமக்களின் கண்களுக்கு புலப்படாத வகையில் அமைச்சர்களை வேறு அமைச்சுகளுக்கு மாற்றுவது மற்றும் அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்களை, தொடர்ச்சியாகவர்த்தமானிகளைவெளியிட்டுமாற்றுவதும் தொடர்ந்தும் நடைபெறுகின்றது.

இலங்கையில் அமைச்சரவை உருவாக்கம் குறித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெரிட்டே ரிசர்ச்  நிறுவனம் யு சுயவழையெட ஆநவாழன கழச ஊயடிiநெவ குழசஅயவழைn in ளுசi டுயமெயஎனஅறிக்கையொன்றைவெளியிட்டது. அரசாங்கம் ஒன்றில் நன்குவடிவமைக்கப்பட்டகட்டமைப்பிற்குள் தவறானசீரமைப்புமற்றும் பிளவுபடுதலை தவிர்ப்பதற்கான கோட் பாட்டினையையும் சிந்தனையையும் அந்தஅறிக்கை நன்கு விளக்கியது. முன்மொழியப்பட்டுள்ளவரைபானது இலங்கையில் பாராட்டப்பட்ட 1988 ஆம் ஆண்டு நிவர்வாகசீர்திருத்தகுழுவின் பணிகளைஅடிப்படையாககொண்டுகற்றாராய்ந்துமேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிளவுபடுவதைகுறைக்கவினைத்திறனானஅரசாங்கம் ஒன்றுமிகப்பெரியதாகஅமையக்கூடாது. இலங்கைஅரசாங்கமானது 15 அமைச்சுக்களுடன் வினைத்திறனுடனும் திறமையாகவும் செயல்பட முடியும் என்பதனைஅந்தஆய்வறிக்கைநிரூபித்துள்ளது. அரசியலமைப்பில் 30 அமைச்சுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாரிய எண்ணிக்கையாகும். 15 அமைச்சரவைகளை கொண்ட தொகுப்பானது“யு உயடிiநெவ வாயவ றழசமள” என கிராபிக்ஸ் வாயிலாக காண்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட முக்கியமானது என்னவென்றால் (திறமையான மற்றும் பயனுள்ள கட்டமைப்பை பராமரிக்கும்; போது மாற்றியமைப்பதற்கான சாத்தியம் உள்ளது) விடயதானங்கள் மற்றும் நிறுவனங்களை ஏற்புடையதாக நிறுவுவதே ஆகும். இந்த நோக்கத்திற்காகவே வெரிட்டே  ரிசர்ச் இலங்கையில் ஏற்புடைய பகுத்தறிவுகொண்டஅரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வரைவினை மேம்பட வடிவமைத்துள்ளது.

நன்கு திட்டமிடப்பட்ட அமைச்சு கட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட வேண்டி ய அரசாங்கத்தின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக உள்ளடக்கி அமைச்சரவைஒன்று அமைக்கப்படும் போது அரசாங்கம் வெளியிட வேண்டிய வர்த்தமானியின் மாதிரி வடிவம் (புளுபிரிண்ட்) வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தவரைபானது முழுமையாக அச்சுப்பதிக்கப்பட்டுள்ளது. ஏற்புடைய அல்லது நடைமுறைக்கு சாத்தியமான அரசாங்கம் ஒன்றைஅமைப்பதற்கு இது மாத்திரம் ஒரே வயழில்ல. செயலிழந்த கட்டமைப்பை விட திறமையான மற்றும் பயனுள்ள கட்டமைப்பை அரசாங்கம் ஒன்று கொண்டிருப்பதற்கு இது ஒரு ஆயத்த முறையாகும். 

கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இலங்கையர்களுக்கு மிகவும் கசப்பான ஒரு அனுபவத்தை கற்பித்துள்ளது. நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு தீவிரமாக அக்கறை காட்டாத வேட்பாளர்களால் நாட்டை நீட்டித்த பொருளாதாரமீட்சியை நோக்கி கொண்டுசெல்ல முடியாது என்ற புதிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

தவறான சீரமைப்பு, பிளவுபடுதல் மற்றும் ஸ்திரமின்மை ஆகியனவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாரும் எவ்வாறான திட்டங்களை தன்வசம் வைத்திருக்கின்றனர் என்பதனை புரிந்துகொண்டு செயல்படுவது அவசியமாகும். 

அரசாங்கத்தின் பகுத்தாய்வற்ற விஸ்தரிப்பு கட்டமைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க இலங்கைக்கு ஒரு அமைப்பு மாற்றமானது அவசியமாகும். எனினும் ஜனாதிபதி வேட்பாளர்கள் அதற்கு வழங்குகின்ற அர்ப்பணிப்புக்கள் என்ன? இந்தவிடயங்கள் மற்றும் ஏனைய முக்கியமான காரணங்கள் தொடர்பில் பிரதான வேட்பாளர்களின் கொள்கை பிரகடனத்தை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு தேவையான வசதியினை ஏற்படுத்திக்கொடுக்க வெரிட்டே ரிசர்ச் விரைவில் ஒரு சாதனத்தை உங்களுக்கு வழங்கும். வாக்களிக்கும் முன்னர் பார்வையிடுங்கள்.

கலாநிதி நிஷான் டி மெல்,

பொருளாதார நிபுணர் - வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் இயக்குனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41