அனைவரும் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை தேர்தலில் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 68ஆவது மக்கள் வெற்றிப் பேரணி மொனராகலையில் இன்று புதன்கிழமை (18) சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
புலனாய்வுத்துறை அறிக்கையின் பிரகாரம், 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை வாருகின்ற ரணில் - அநுர ஜோடி கீழ் மட்டத்தில் இருக்கிறது.
புனித தலதா மாளிகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன்முதலில் சமர்ப்பித்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னரே நாம் தேர்தல் பணிகளை ஆரம்பித்தோம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் புத்தபெருமானின் ஆசீர்வாதங்கள் பாதுகாக்கும் என்பதோடு நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
வன்முறை என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்ல. எனவே மாற்றுக் கொள்கையோடு இருக்கின்ற எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த நாட்டை கட்டியெழுப்புகின்ற பயணத்தில் அனைவரையும் பங்காளர்களாக இணைத்துக்கொள்வோம்.
தான் மத சுதந்திரத்தை கௌரவப்படுத்துவதோடு, பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களை பின்பற்றுவதற்கு எவருக்கும் உரிமை இருப்பதனால், அந்த உரிமையை பாதுகாப்பதோடு, மத சார்பற்ற நாட்டை உருவாக்குவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஆறு மாதங்களில் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்
தாம் அதிகாரத்துக்கு வந்து ஆறு மாதங்களுக்குள் போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தேவையான அதிகபட்ச தீர்மானங்களை எடுத்து, போதைப் பொருள் மாபியாவை நிறைவுக்கு கொண்டு வருவோம்.
வாக்கை வீணடிக்காது ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்குங்கள்
மக்கள் விடுதலை முன்னணி, திசைகாட்டி, பொது ஜன முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைவரும் இறுதித் தருணத்தில் உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் தொலைபேசிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த முறை தேர்தலில் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம்.
எம்மிடம் மோசடியான திருட்டு டீல்கள் இல்லை
எம்மிடம் பொய், திருட்டு, மோசடி என்பன இல்லை. அரசியல் டீல்கள் இல்லை. பாதிக்கப்பட்டிருக்கின்ற 220 இலட்சம் மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக ஒப்பந்தம் மாத்திரமே காணப்படுகிறது. இதன்போதும் வரிச் சுமையை குறைத்து முதலீடுகளை அதிகரித்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்போம். நாட்டை சீரழித்த திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நாட்டில் இருந்து திருடிச் சென்ற அனைத்து சொத்துக்களையும் வளங்களையும் மீண்டும் நாட்டுக்கு பெற்றுக்கொள்வோம்.
நான் சொல்வதைச் செய்கின்றவன்
விவசாயிகளுக்கு 5000 ரூபாவுக்கு நிவாரண அடிப்படையில் உரத்தை வழங்குவோம். வெல்லஸ்ஸ பகுதியில் இல்லாதுபோன பாரம்பரியமாக விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்போம். வறுமையை ஒழிப்பதற்காக ஐந்து திட்டங்களின் கீழ் மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபா வீதம் 24 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவோம். நாம் வாக்குறுதியளித்தால் அது வார்த்தைகளோடு மாத்திரம் மட்டுப்படாமல் அதனை நிதர்சனப்படுத்துவோம்.
வெட்கமில்லாத அரசாங்கம் கதிர்காமத்திலும் பார் திறந்திருக்கிறது.
இந்த அரசாங்கம் கதிர்காம புண்ணிய பூமியில் திறந்திருக்கின்ற மதுபானசாலையை மூடுவோம். இந்த அரசாங்கம் வெட்கமில்லாமல் மத புண்ணிய பூமிகளிலும் மதுபானசாலைகளை திறக்கின்றது. எனவே ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM