மாத்தளை, நாவுல பிரதேசத்தில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று (18) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
நாவுல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல, புஸ்ஸெல்லாவ, உடதலவின்ன மற்றும் வத்தேகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38, 49 மற்றும் 50 வயதுடைய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 05 டெட்டனேட்டர் குச்சிகள் மற்றும் 03 வோட்டர் ஜெல் குச்சிகள் ஆகிய வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாவுல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM