(எம்.மனோசித்ரா)
தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர்.
தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
பம்பலப்பிட்டியவில் நேற்று புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் ஒருமனதாக அவருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
அதற்கான காரணம் குறித்து வினவிய போது, 21ஆம் திகதியின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரிசைகளில் நிற்பதற்கு தாம் விரும்பவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
பொருளாதாரம் படிப்படியாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் மாற்றமொன்று ஏற்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய சுமை மக்கள் மீதுதான் சுமத்தப்படும்.
தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்ரஸ் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். ஜனாதிபதியின் வெற்றிக்காக முன்னின்று கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM