விடுதலைப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் எம்மிடம் இருக்கக் கூடிய வாக்குரிமை என்ற ஜனநாயக ஆயுதத்தினை எமது இனத்தின் அரசியல் விடிவிற்காக நாம் பயன்படுத்தவேண்டுமே தவிர அதனை அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக போலி உத்தரவாதம் தரும் பேரினவாதிகளுக்கு இரையாக்கக் கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரும் ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் வேட்பாளர் பா. அரியநேத்திரனை ஆதரித்து புண்டத்தரிப்பு சாந்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியம் இன்று தேசிய நிகழ்ச்சி நிரலுக்குள் உள்ளவர்களாலேயே பெரும் சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியத்தில் பயணிப்போர் சிலர் தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு ஆதரவாக இங்கே மேடை ஏறுகின்றனர்.
அப்படியாக அகச் சவால்கள், சோதனைகள் நிறைந்த ஓர் தேர்தலாக இம் முறைய தேர்தல் எம் முன் வந்து நிற்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் என்பது பொரும் உழல்வாதிகள், அரசியல் பலம் பொருந்தியவர்களை எதிர்த்து போட்டியிடுகின்ற விடயமாகும்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் நாம் கொள்கை இலட்சியங்கள் எனப் பயணிக்கையில் தேர்தல் என்றால் பெருந்தொகை நிதி வேண்டும்.
அது வேண்டும் இது வேண்டும் என இன்றும் எமது மண்ணில் தமிழ்த் தேசியம் பேசும் பலரும் பேரினவாத வேட்பாளர்களுக்கு சேவகம் செய்கின்றனர்.
பேரினவாதச் சிந்தனை உடைய அடிப்படையில் அரசியல் தீர்வு விடயத்தில் சாதாரணமாக இருக்கக் கூடிய தீர்வுகளை முன்னிறுத்தி அவற்றை நிறைவேற்றுவதற்குக் கூட உத்தரவாதமற்ற நிலைமைகளுக்குள் சில தமிழ்த் தலைவர்கள் சிக்கியுள்ளனர்.
தம் விழுந்தது மாத்திரமல்லாது எமது மக்களையும் வீழ்த்தி ஒப்பந்த அரசியல் செய்ய நினைக்கின்றார்கள். நாம் யுத்தத்தின் பின்னர் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கினோம்.
அதில் மைத்திரிபால சிறிசேன போன்றோர் எம்மால் பதவிக்குக் கொண்டு வரப்பட்டவர்கள். அவர்கள் எல்லோரும் இனவாதத்தினையும் தமிழருக்கான மனிதாபிமான முன்னேற்றங்களில் கூட எம்மை ஏமாற்றியவர்கள்.
இன்று தென்னிலங்கையின் வேட்பாளர்களை ஆதரிக்கக் கூறுபவர்கள் எந்தவித உத்தரவாதமும் இன்றியே எமது மக்களை வழிநடத்தப்பார்க்கின்றனர்.
இந் நிலையில் எமது மக்கள் இலட்சிய வழியில் கொள்கை வழியில் முடிவினை எடுத்து தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலுச்சேர்க்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM