நான் எனது வாழ்க்கை முழுவதும் போராடுவதிலேயே செலவழித்தேன் என நினைத்தேன் ஆனால் இளம் தலைமுறை அற்புதமான விடயத்தை செய்தது என தெரிவிக்கின்றார் சமதி பிரமித்த பிரஹ்மநாயக்க.
2022 இல் கொழும்பில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தான் முகாமிட்டிருந்த பகுதியை பார்த்தவாறு அவர் இதனை தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள பசுமையான புற்றரை நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களாக மாற்றப்பட்டிருந்தது என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.
நாங்கள் தற்போது அதிகளவு சக்திவாய்ந்தவர்களாக அதிகளவு வலுவானவர்களாக உள்ளோம் என்கின்றார் இலங்கையின் 33 வயது வங்கியாளரான அவர்.
இரண்டு வருடத்திற்கு முன்னர் பெருமளவு மக்கள் இலங்கையின் மிகவும் வெறுக்கப்பட்ட மக்கள் ஆதரவற்ற தலைவரை அதிகாரத்திலிருந்து அகற்றினார்கள்.
தற்போது வாக்காளர்கள் இன்னும் சில நாட்களில் யார் ஜனாதிபதியாகவேண்டும் என்பதை தெரிவு செய்யவுள்ளனர்.
அரகலயவிற்கு பின்னரான முதல் தேர்தல் இது - சிங்களத்தில் போராட்டத்திற்கு அரகலய என அர்த்தம். இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அரகலய வெடித்ததுஇபணவீக்கம் 70 வீதமாக காணப்பட்டது. உணவுஇசமையல் எரிவாயுஇமருந்து போன்றவற்றிற்கு தட்டுப்பாடு நிலவியது.
இந்த குழப்பத்திற்கு அவ்வேளை ஜனாதிபதியாக பதவிவகித்த கோட்டாபய ராஜபக்சவும் அவரது அரசாங்கமுமே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரின் வாசல்ஸ்தலத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
பெரும் மகிழ்ச்சியில் திளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்திற்குள் குதித்தனர்.வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அது அற்புதமான விடயம் என்கின்றார் ஜனாதிபதியின் நீச்சல் தடாகத்தில் நீந்திய மிதுன் ஜெயவர்த்தன 28- அன்றை நாளைய நினைகூர்ந்த அவர் வேலையில்லை வீட்டில் மின்சாரமும் சமையல் எரிவாயும் இல்லைஇஎன தெரிவிக்கின்றார்.
சனிக்கிழமை தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்பதை இன்று உணர்வதாக தெரிவிக்கும் அவர் மக்களால் தெரிவுசெய்யப்படும் தலைவர் தேவை இந்த ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் இல்லை என்கின்றார்.
தற்போது ஜனாதிபதி பதவியிலிருக்கும் ரணில்விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து தற்போது அந்தப் பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். வலிமிகுந்த பொருளாதார சீர்திருத்த காலத்தின் ஊடாக இலங்கையை வழிநடத்தும் பணியை மேற்கொண்டுள்ள திரு விக்ரமசிங்க சுயேச்சையாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவர் இதற்கு முன்பு இரண்டு முறை ஜனாதிபதியாக நின்றார் ஆனால் ஒருபோதும் வெற்றிபெறவில்லை மேலும் அவரது அரசியல் எதிர்காலம் நிச்சயமற்றதாக தோன்றுகிறது.
பல தசாப்தங்களாக இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்திய ஒரு அரசியல் வம்சமான ராஜபக்சக்களுடன் பலர் விக்கிரமசிங்கவை தொடர்புபடுத்துகின்றனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த பல வருட நிதி முறைகேடுகள் காரணமாக அவர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட நிதி நெருக்கடிக்கு காரணமான 13 முன்னாள் தலைவர்களில் கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் மஹிந்த மற்றொரு முன்னாள் ஜனாதிபதி என்று தீர்ப்பளித்தது.
அந்த பெயருடன் பெயருடன் அரசியல் சுமை காணப்பட்டாலும் இந்தத் தேர்தல்களில் ஒரு ராஜபக்சே அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் - குடும்பத்தின் ஆதரவைப் பெறும் இடங்கள் இன்னும் உள்ளன.
அத்தகைய ஒரு மாவட்டம் கொழும்பிற்கு வெளியே உள்ளது. மினுவாங்கொடை நகரில் திங்கட்கிழமை நாமல் ராஜபக்ச உரையாற்றுவதை கேட்க நூற்றுக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.
அவர்மேடையை நெருங்கும் போது இசை வாணவேடிக்கைகள் மற்றும் ஆதரவாளர்களின் ஆரவாரங்கள் அவரை வரவேற்றன. அவரது தந்தையும் மகிந்தவும் அவருடன் மேடையில் இணைந்தார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியில் தனது குடும்பத்தின் பங்கை நாமல் ராஜபக்ச மறுத்துள்ளார்.
"எங்கள் கைகள் சுத்தமாக இருப்பதை நாங்கள் அறிவோம் நாங்கள் மக்களுக்கு அல்லது இந்த நாட்டிற்கு எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"நாங்கள் மக்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அவர்களுக்கு என்ன வேண்டும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்கள் தீர்மானிக்கட்டும்."
மொத்தத்தில் செப்டம்பர் 21 தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அவர்களில் பெண்கள் யாரும் இல்லை. 2019 இல் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச 42வீத வாக்குகளைப் பெற்று கோட்டாபய ராஜபக்சவிடம் தோற்றார். இந்த முறை அவருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு பலர் அனுரகுமார திஸாநாயக்கவையே எதிர்பார்க்கின்றனர். இடதுசாரி கூட்டணியின் வேட்பாளர் எதிர்பாராத விதமாக முன்னிலையில் உள்ள வேட்பாளராக மாறியுள்ளார்.
கொழும்பில் இருந்து வடமேற்கே மீரிகம என்ற சிறிய நகரத்தில் உள்ள வயல்வெளியில் கடந்த சனிக்கிழமை திரு திஸாநாயக்க பேசுவதைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.அவர் வெற்றிபெறுவாரா என கேட்டதுபோது 100 வீதம் உறுதி என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் கட்டமைப்பில் குழப்பத்தை ஏற்படு;த்தப்போவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் இம்முறை பொருளாதாரம் முன்னணியில் உள்ளது.
ரங்கிகா முனசிங்க தனது நான்கு வயது மகனுடன் காணப்படுகின்றார் இப்போது செலுத்தும் அதிக வரிகள் குறித்து கவலைவெளியிடுகின்றார்
"இது மிகவும் கடினம். சம்பளம் குறைக்கப்படுகிறது பொருட்கள் மற்றும் உணவு மீதான வரி அதிகமாக உள்ளது. குழந்தைகள் சாப்பாடு பால் மா எல்லாம் விலை அதிகம். வரிகள் மிக அதிகமாக உள்ளன எங்களால் அதை சமாளிக்க முடியாது”என்று 35 வயதான கொழும்பில் உள்ள பரபரப்பான சந்தையில் பிபிசியிடம் கூறினார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கடனுதவியின் காரணமாக 2022 இல் வங்குரோத்து நிலையைத் தடுக்க முடிந்தது. ஆனால் இப்போது அனைவரும் நாட்டின் மகத்தானகடன் சுமையிலிருந்து அழுத்தத்தை உணர்கிறார்கள் இதில் வெளிநாட்டு மற்றும் தேசியக் கடன்களும் அடங்கும்.
70களில் இருக்கும் மொஹமட் ரஜப்தீன் “நான் இரண்டு வேலைகளைச் செய்கிறேன்என்கின்றார். அவர் பரபரப்பான தெருவில் ஒரு கடையில் இருந்து கரண்டிகளை விற்கிறார். இது முடிந்ததும் அவர் தனது இரண்டாவது வேலைக்குச் செல்வார் பாதுகாப்பு உத்தியோகத்தராக வேலை செய்வார்.
“எங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் மக்கள் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ முடியும். அதையெல்லாம் எங்கள் அரசாங்கம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம்
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகள்; குறித்து குரல் எழுப்புவது இலங்கைக்கு புதிய விடயமாகும்இந்த மாற்றத்திற்கு ஆர்ப்பாட்ட இயக்கமே காரணம் என்கின்றார் இளம் அரசியல் செயற்பாட்டாளர் புவனேக பெரேரா
அரசாங்கத்தை எதிர்கொள்வதிலும் தவறுகளை தட்டிக்கேட்பதிலும் மக்கள் துணிச்சல் மிக்கவர்களாக மாறியுள்ளனர்.என தெரிவித்த 28 வயது புவனேக பெரேரா இது அரசாங்கம் குறித்து மாத்திரமல்லஉங்கள் வீட்டிலாகயிருக்கலாம் வீதிகளிலாகயிருக்கலாம்மக்கள் குரல் கொடுக்கவும் ஏனையவர்களுக்காக இணைந்து செயற்படவும் தயாராக உள்ளனர் என தெரிவித்தார்.
இரண்டு வருடங்களிற்கு முன்னர் எழுச்சியில் பங்குபெற்றி தன்னை போல ஆயிரக்கணக்கானவர்களின் முயற்சி இது என அவர் தெரிவிக்கின்றார்.
மக்கள் தற்போது அரசியல் குறித்து பேசுகின்றார்கள் கேள்வி கேட்கின்றனர்மக்கள் தங்கள் கரங்களில் அதிகாரம் உள்ளது தாங்கள் வாக்களிக்கலாம் என கருதுகின்றனர் என அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கான பாதை இலகுவானதாகயிருக்காது என தெரிவிக்கின்றார் காலநிலை அரசியல் செயற்பாட்டாளர் மெலானி குணதிலக.
ஆனால் அவர் நம்பிக்கையுடன் காணப்படுகின்றார்.
அரசியல் பொருளாதார கலாச்சாரத்தில் மாற்றங்கள் பெருமளவிற்கு ஏற்படவில்லைஆனால் சமூகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கின்றார் அவர்.
முதல் தடவையாக மக்கள் விடயங்களை கையில் எடுத்தனர்நாட்டிற்கு எது சிறந்ததோ அதற்காக தங்கள் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தினார்கள் என்கின்றார் அவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM