- இலங்கை குடியரசில் மூவினத்தவர்களுக்கும் சமவுரிமை
- போரினால் சகலருக்கும் ஒரே விதமான பாதிப்பு
- மன்னித்து முன்னோக்கிச் செல்வோம்
முப்பது வருடகால போரில் தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்களும், முஸ்லிம்களும் உயிரிழந்தனர். அன்புக்குரியவர்களை இழப்பதனால் ஏற்படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்கிறேன். இருப்பினும் அந்த வலி இருதரப்புக்குமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒரே விதமான பாதிக்கப்பட்டோம். நாம் ஒருவருக்கொருவர் மன்னிப்பளித்து முன்னோக்கி பயணிக்க வேண்டும். அதேபோன்று இந்த மண்ணில் பிறிதொரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோன்று இலங்கை குடியரசின் அதிகாரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிரஜைகளுக்கும் சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்தவ, சமூகங்களில் எதனை சார்ந்திருப்பினும் இந்நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் சமமான உரிமைகள் உண்டு. அவ்வாறிருக்கையில் யாருக்கும் எம்மால் விசேட அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீரகேசரியின் 'ஜனாதிபதி வேட்பாளரிடம் கேளுங்கள் - 2024' எனும் தலைப்பில் ஆயிரக்கணக்கான பொதுமக்களால் தொடுக்கப்பட்ட வினாக்களில் முக்கிய வினாக்களுக்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ அளித்துள்ள பதில்கள் வருமாறு,
கேள்வி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ் சமூகம் நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றது. இனங்களுக்கு இடையில் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உங்கள் நிர்வாகம் எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளும்? குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்வது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் இக்குடியரசின் அதிகாரங்கள் 1972ஆம் ஆண்டு முதல் சலக பிரஜைகளுக்கும் சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, கிறிஸ்தவ, சமூகங்களில் எதனை சார்ந்திருப்பினும் இந்நாட்டில் ஒவ்வொரு பிரஜைக்கும் சமமான உரிமைகள் உண்டு. அவ்வாறிருக்கையில் யாருக்கும் எம்மால் விசேட அதிகாரங்களை வழங்க முடியாது. இப்பின்னணியில் இன சமூகங்களை பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என முத்திரைக்குத்துவது தவறாகும்.இது ஒரு மேற்குல சிந்தனையாகும். நாம் சகல பிரஜைகளுக்குமான சமத்துவ இறையாண்மையை கொண்ட ஒருமித்த குடியரசாவோம். வடக்கில் வாழும் ஒரு தமிழ் பிரஜைக்கு சிங்கள அல்லது முஸ்லிம் பிரஜைக்குள்ள அதே சிவில் உரிமைகள் உண்டு.
இருப்பினும் அனைத்து பிரஜைகளுக்குமான அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அனைத்து இன குழுமங்களினதும் கலாச்சார அடையாளங்களை பாதுகாப்பதுடன் மாத்திரமன்றி, எமது நாட்டின் பல்லினத்தன்மையை கொண்டாடுவோம்.வடக்கில் வாழும் மக்களின் உண்மையான கரிசணைகள் தெற்கில் வாழும் மக்களின் கரிசணைகளை ஒத்தவையாகும். ஆவர்கள் அவர்கள் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாடு, மற்றும் நிலைபேறான சூழல் என்பவே தேவைகளாக காணப்படுகின்றன.அவை எவ்வித இனபாகுபாடுகளுமின்றி சகலருக்கும் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்துவோம்.
கேள்வி இறுதிக்கட்டப் போரில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்படவர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டிருக்கும் பொறுப்புக்கூறல் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன? நீங்கள் ஆட்சிபீடமேறும் பட்சத்தில் மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகள் பற்றிய குற்றச்சாட்டுக்களை எவ்வாறு அணுகப்போகின்றீர்கள்?
பதில் சுமார் 30 வருடகாலம் நீடித்த போரில் இறுதிக்கட்ட யுத்தத்தை பற்றி மாத்திரம் ஒருவரால் பேச முடியாது அது இலங்கை அரசாங்கத்துக்கும் ஆயுதமேந்திய பயங்கரவாத குழுவுக்குமிடையில் நடைப்பெற்ற போராகும். அந்நீண்டகால பகுதியில் ஆயிரகணக்கானோர் உயிரிழந்தனர். அவர்களில் தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும், முஸ்லிம்களும் உள்ளடங்குகின்றனர்.
இருப்பினும் நாம் தொடர் குண்டுத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு, கொலைகள், மற்றும் விடுதலை புலிகள் இயக்கத்தினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள், சிறுவர் போராளிகள் என சகலவற்றையும் முடிவுக்கு கொண்டு வந்தோம்.அன்புக்குரியவர்களை இழப்பதனால் ஏற்படக் கூடிய வலியை நான் புரிந்துக் கொள்கிறேன்.இருப்பினும் அந்த வலி இருதரப்புக்குமானது என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.நாம் அனைவரும் ஒரே விதமான பாதிக்கப்பட்டோம். ஒரு நாடு என்ற ரீதியில் நாம் பெருமளவு உயிர்களை இழந்து விட்டோம்.நாம் ஒருவருக்கொருவர் மன்னிப்பளித்து முன்னோக்கி பயணிக்க வேண்டும்.அதேபோன்று இந்த மண்ணில் பிறிதொரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்க கூடாது.
கேள்வி நாட்டில் போர் சூழ்நிலை இல்லாத பின்னணியில், வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத்துறைக்கான செலவினத்தை குறைப்பதற்கு உங்களது நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
பதில் எமது நாட்டுக்கு எதிரான உள்ளக மற்றும் சர்வதேச சக்திகளின் அச்சுறுத்தல்கள் இன்னமும் தொடர்கின்றன. ரஷ்ய – உக்ரைன் மோதல், இஸ்ரேல் - பலஸ்தீன் மோதல் மற்றும் ஐரோப்பாவில் வன்முறை எழுச்சி என்பன உள்ளடங்களாக உலகளாவிய ரீதியில் பல்வேறு வன்முறை மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனை பார்க்க முடிகிறது. 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மிகப் பாரிய இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றன.அதேபோன்று 2022 இல் உள்ளக பாதுகாப்பு பொறிமுறையின் தோல்வியின் காரணமாக வன்முறை எழுச்சி ஒன்று உருவானதை பார்த்தோம். எனவே பாதுகாப்பு துறைக்கான செலவினத்தை எம்மால் குறைக்க முடியாது. இருப்பினும் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன், எமது பாதுகாப்பு துறைசார் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை முன்னிறுத்தி பணியாற்றி வருகிறோம்.அது அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பினை இலக்காகக் கொண்டதாகும் அதனை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.
கேள்வி அரசதுறை செலவினங்கள் மற்றும் வரிகளைக் குறைப்பதை இலக்காகக்கொண்டு அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் நீங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நகர்வுகளை நீங்கள் மேற்கொள்வீர்களா?
பதில் பிரஜைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதித்துவம் அதிகரிப்பது என்பது நாட்டின் ஜனநாயகத்துக்கு உகந்ததாகும். பாராளுமன்றத்துக்கு தெரிவாகும் உறுப்பினர்களுக்கு அவர்களின் தொகுதியை மாத்திரமன்றி நாட்டின் சகல பிரஜைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பொறுப்பு உண்டு. ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரான நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்.ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் அதனையே செய்ய வேண்டும். இந்த இன மைய அரசியலை விடுத்து ஒட்டுமொத்த நாட்டினதும் அபிவிருத்திக்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
ஏனைய வேட்பாளர்களை போன்று வரிக்குறைப்பு தொடர்பில் நாம் இலக்கிடப்பட்ட தொகைகளை அறிவிக்கவில்லை. அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். நாம் 2019இல் வரிக்குறைப்பு தொடர்பில் இலக்கங்களை அறிவித்து இதனையே செய்தோம். இருப்பினும் பின்னர் அது எமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. எனவே அதன்மூலம் நாம் பாடம் படித்திருக்கிறோம். எவ்வாறிருப்பினும் மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை வழங்குவதாக நாம் உறுதியளிக்கிறோம். பல்வேறு விதமாக பெயரிடப்பட்டிருக்கும் வரிகளை நாம் நிச்சயமாக குறைப்போம். அது வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். தற்போது அறிவிக்கப்பட்டிருப்பவற்றில் 'நாமல் இலக்கு' மாத்திரமே நடைமுறைக்கு சாத்தியமான கொள்கைத் திட்டமாகும்.
கேள்வி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, மீண்டும் பாராளுமன்ற ஆட்சி முறைமைக் கொண்டுவருவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால், அந்த நிறைவேற்றதிகார வகிபாகத்தை வழங்கக் கூடிய பிறிதொரு கட்டமைப்பு எமக்கு தேவைப்படும். பாராளுமன்றம் என்பது சட்டங்கள் என்ற வடிவத்தில் தீர்மானம் எடுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அதனை நாம் சட்டவாக்கம் என கூறுகிறோம். அவ்வாறெனில் அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி, அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் நிறைவேற்று பொதுச்சேவை ஆகிய மூன்று கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. இங்கு சட்டவாக்கத்துக்கும் நிறைவேற்றதிகாரத்துக்கும் இடையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். இல்லாவிடின் ஒரே கட்டமைப்பே அவை விரும்பியது போன்று சட்டங்களை இயற்றி அவற்றை நடைமுறைப்படுத்தும். அது எதேர்ச்சதிகாரமானது. தற்போதைய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்துடன் பினைந்துள்ளது. எனவே நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தால் மாகாண சபை முறைமையும் ஒழிக்கப்படும். எனவே இது சாதாரணமாக கலந்துரையாடப்பட முடியாத ஒரு பாரதுரமான விடயமாகும். எனவே தற்போது அரசியலமைப்பில் தலையீடு செய்வதற்கு நான் முன்னுரிமையளிப்பதில்லை. மாறாக அதனூடாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே முயற்சிக்கிறேன்.
கேள்வி நீங்கள் வெற்றியீட்டினால் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தின்கீழ் தொடர்ந்து செயற்படுவீர்களா? பொதுமக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கும் அதேவேளைஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்வதில் எவ்வாறு சமநிலையைப் பேணுவீர்கள்?
மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு போன்ற பயன்பாட்டு சேவைகள் இலாபமீட்ட வேண்டும் அல்லது செலவுகளை ஈடுகட்ட வேண்டும் ஆகிய இரண்டில் உங்களது அபிப்பிராயம் என்ன? மேலும், பொதுப்போக்குவரத்து சேவை மற்றும் ஸ்ரீலங்கன் விமானசேவை என்பவற்றின் முறையற்ற நிர்வாகத்தை எவ்வாறு சீரமைக்கப்போகின்றீர்கள்?
பதில் சர்வதேச நாணய நிதியம் பெருமளவுக்கு அரசாங்க வருமானத்திலும், செலவினத்திலுமே கவனம் செலுத்துகிறது. இருப்பினும் அதனூடாக மாத்திரம் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. நாம் இவ்வொட்டுமொத்த செயற்திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து மீளக் கலந்துரையாடமாட்டோம். அரசாங்க வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் வீதம் போன்ற முக்கிய இலக்குகள் வரவேற்கத்தக்கதாகும். எமக்கும் அவ்விலக்குகள் உண்டு. இருப்பினும் அவ்விலக்குகளை அடைவதற்கான எமது அணுகுமுறை வேறுப்பட்டதாகும். உள்நாட்டு பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு வரிகளை அதிகரித்தல், தோல்வியடைந்த உத்தியாகும். நல்லாட்சி அரசாங்கம் அதனை செய்ததுடன் பொருளாதாரத்தை அழித்தது. அதே விடயம் தற்போது மீண்டும் நடைபெறுகிறது. பொருளாதார வளர்ச்சி இல்லாத போது அங்கு வருமானம் குறைவடைவதுடன் அது வரி வருமானத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே இவற்றில் ஒரு சமனிலையை பேண வேண்டும். அதுவே எமது உத்தியாகும் .இதனை நாம் மஹிந்த ராஜபக்ஷவின் தசாப்தகால ஆட்சியில் செய்தோம். அதனை எம்மால் மீண்டும் செய்ய முடியும்.
அரசுக்கு சொந்தமான கட்டமைப்புக்கள் உள்ளடங்களாக அரச சொத்துக்களை நாம் விற்பனை செய்யமாட்டோம். மாறாக அவற்றுக்கு பொருத்தமான தலைமைத்துவத்தை நியமிப்பதன் ஊடாகவும் சர்வதேச முகாமைத்துவ செயன்முறைகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றை செயற்திறன் மிக்க சொத்துக்களாக மாற்றியமைப்போம். அதனை எம்மால் செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறோம். செவனகல சீனித் தொழிற்சாலை அதற்கு சிறந்த உதாரணமாகும். கோட்டபய ராஜபக்ஷவின் வெறும் இருவருட ஆட்சியில், அதிலும் குறிப்பாக கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாம் அதனை இலாபமீட்டும் கைத்தொழிலாக மாற்றினோம். அக்காலப்பகுதியில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவன கடன்களையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்தோம் எனவே எம்மால் இதனை செய்ய முடியும். எமது முயற்சியாண்மைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுபவம் வாய்ந்த இளம் தொழில் படை அவசியமாகும். நான் அத்தகு நபர்களின் ஆதரவினை பெற்றிருக்கிறேன்.
கேள்வி மலையக தமிழ் சமூகம் குறிப்பிடத்தக்க சமூக பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. அவர்களின் சம்பளம், நில உரிமைகள், வீடுகள், சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்த உங்கள் நிர்வாகம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்?
பதில் எமது கொள்கை பிரகடனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய வேதன விடயத்துக்கு பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுப்போம். சம்பள அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த முடியாது. அதேநரம் உற்பத்திச் செலவை அதிகரிக்கும் பட்சத்தில் உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி வீழ்ச்சியடையும். இது தேயிலை உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பின்மை ஏற்படும். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த விடயத்தில் ஒருங்கிணைந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.
நாட்டின் ஏனைய மக்களை போன்று இந்த மக்களுடைய வருமான மூலங்களை பெற்றுக்கொடுக்க முடியுமென நம்புகிறேன். அதேநேரம் பெருந்தோட்டத்துறைகளில் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்குவோம். தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்படும். மேலும் உயர் தொழில் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்குரிய பயிற்சிளை வழங்கி தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்போம்.
கேள்வி நாட்டில் பல்வேறு துறைகளில் ஊழல் மோசடிகள் மேலோங்கியிருக்கின்றன. அதனை எதிர்த்துப் போராட உங்கள் நிர்வாகம் எத்தகைய வழிமுறைகளை கையாளும்? பொதுநிதியை முறைகேடாகப் பயன்படுத்தி பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? மேலும் இதுபோன்ற பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில் ஒவ்வொரு பிரஜையும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகளே. குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். அந்தவகையில் எனது குடும்பத்தார் மீது இதுவரை எந்த குற்றச்சாட்டுக்களும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இவை அனைத்தும் எமது எதிராளிகளது கீழ்தரமான செயற்பாடுகள். என்னுடைய நகர்வுகள் பிழையென்றால் இன்று ஜனாதிபதி வேட்பாளருக்குரிய ஆதரவை பெற்றிருக்க முடியுமா? மக்கள் எம்மை நன்கு அறிந்துவைத்துள்ளார்கள். நாம் ஊழலை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்துவோம். தனித்துவ அடையாள அட்டை முறைமையை நடைமுறைப்படுத்துவோம். வெளிப்படையான கணனி தொழில்நுட்ப முறைமையை கொண்டுவருவோம். இந்த தொழில்நுட்பங்கள் ஆரம்பத்தில் பயன்பாட்டில் இருக்கவில்லை. என்னுடைய அரசாங்கத்தில் எந்த குற்றச்சாட்டுக்களும் எழுவதை நான் விரும்பவில்லை. என்னுடைய அரசாங்கத்தில் தவறான செயற்பாடுகளுக்கு கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச ரீதியிலான தடவியல் கணக்காய்வுகள் இறுக்கமாக முன்னெடுக்கப்படும். குறித்த அறிக்கைகள் வெளிப்படையாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படும். இதுபோன்ற காலத்துக்கேற்ற வாக்குறுதிகளை வழங்கும் ஒரேவேட்பாளராக நானே காணப்படுகிறேன். காரணம் என்னுடைய குடும்பமே 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டவந்தது. அதேபோன்று நானும் மூன்றாண்டுகளுக்குள் ஊழலை நவீன தொழில்நுட்ப உதவியோடு முடிவுக்கட்டுவேன்.
கேள்வி மத சிறுபான்மையினர் திட்டமிட்டு ஓரங்கப்படுவதுடன், பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர். உங்கள் நிர்வாகம் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் என்றும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?
பதில் நான் இதனுடன் உடன்படவில்லை. உலகளாவிய ரீதியில் உயர் வருமானம் பெறும் சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர் மத சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. பௌத்தர்களும் இந்துக்களும் பல நூற்றாண்டு காலமாக அமைதியாக ஒருமித்து வாழ்ந்து வருகின்றனர். பௌத்த விகாரைகளை பாருங்கள் அவற்றுக்குள் இந்து வழிபாட்டு பகுதிகள் உள்ளன. தெற்கில் உள்ள இந்து கோயில்களில் அவர்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சுதந்திரம் உள்ளன. மோதல்கள் தொடர்பில் ஆங்காங்கே சில சம்பவங்கள் எப்போதும் இருக்கும் சட்டங்கள் மற்றும் தண்டனைகளின் ஊடாக மாத்திரம் எம்மால் ஒரு முழு நிறைவான சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது. மத தலைவர்களுக்கு அவர்களை பின்பற்றுவோர் மத்தியில் நம்பிக்கைகள் சார்ந்த பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் சகிப்புத் தன்மையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புண்டு வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்குமுறைமை காரணமாக இந்துக்களை உள்ளே அனுமதிக்காத சில கோயில்கள் இருக்கின்றன. அது அரசாங்க முறைமையினால் ஏற்பட்ட பிர்சிசனையல்ல மாறாக அது வடக்கின் கலாச்சார ரீதியிலான பிரச்சினையாகும். அதனை இந்து மத தலைவர்களே தீர்க்க வேண்டும். அதில் அரசாங்கம் தலையிட்டால் அவர்கள் தமது மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக கூறுவார்கள். நாம் அரசாங்கம் என்ற ரீதியில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு அனைத்து பிரஜைகளுக்குமான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தி பாதுகாப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது.
கேள்வி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு என்பன அதிகரித்து வருவது நாட்டின் சிறுவர் மற்றும் இளைஞர் சமுதாயத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது. பாதாள உலகக்குழுக்களும், அரசியல்வாதிகளும் இதனுடன் தொடர்புபட்டிருப்பதாகப் பொதுமக்கள் நம்புகின்றனர். எனவே இவற்றைத் தடுப்பதற்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?
பதில் அரச பாதுகாப்பை குறைக்க முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம். திகமான சட்டவிரோதமான போதைப்பொருள் வர்த்தகம் சர்வதேச வர்த்தகர்களால் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றை முறியடிப்பதற்கு பாதுகாப்பு படைகளை பலப்படுத்த வேண்டும். இதனை நாம் செய்ய முற்படும்போது தமிழ் அரசியல்வாதிகள் நாம் வடக்கை இராணுவ மயப்படுத்துவதாக முறையிடுகின்றனர்.இது இலங்கை முழுவதும் உள்ள கரிசனையாகும்.நங்கள் பாதாள உலக செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை தொடர்பில் நாம் பொறுமை காக்க மாட்டோம் என்பதை எனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
கேள்வி இலத்திரனியல், மருத்துவமனை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட வெளிநாட்டு கழிவுகளை கொட்டும் இடமாக மாறுவது உட்பட கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலியல் சவால்களை எதிர்கொள்ளவும்இ காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்கவும் உங்கள் நிர்வாகம் கொண்டிருக்கும் உறுதியான திட்டங்கள் என்ன?
பதில் சுற்றாடல் நிலைபேண்தகு என்பது எமது அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் மிகமுக்கியமாக கருத்திட்டமாகும்.நாம் நாட்டின் இயற்கை அழகை தொடர்ந்தும் பாதுகாப்போம்.ஆனால் மக்கள் மிக விரைவான பொருளாதார வளர்ச்சியை கோருகின்றனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி எனும் போது அங்கு சுற்றாடல் ரீதியான விலை ஏற்படக்கூடும்.அதிக பொருளாதார வளர்ச்சி உள்ள நாடுகளில் சுற்றாடல் மாசுடைவு மிகப்பாரியளவில் உள்ளது.நாம் எமது விவசாயத்தில் நூறு சேதனபசளை திட்டத்துக்கு செல்ல முற்பட்டோம்.ஆனால் விவசாயிகள் அதற்கு ஆதரவளிக்கவில்லை.எனவே மஹிந்த சிந்தனை திட்டத்தில் உள்ளவாறு நாம் இரசாய உர நிகழ்ச்சித் திட்டத்தை தொடர தீர்மானித்துள்ளோம்.ஆனால் எமது நாட்டை வேறு நாடுகளின் கழிவுகளை கொட்டும் மைதானமாக உருவாகுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.
கேள்வி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை, குறிப்பாக உயர் திறமையான வேலைகளை உருவாக்குவதற்கான உங்கள் நீங்கள் உத்திகள் எவை? இளைஞர்கள் மத்தியில் எத்தகைய திறன்கள் அவசியமானவை என நீங்கள் கருதுகின்றீர்கள்? அவற்றை மேம்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள்?
பதில் மஹிந்த ராஷபக்ஷவின் யுகத்தில் இலங்கை சுதந்திரத்தின் பின்னர் மிகப்பெரிய மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. 24 பில்லியன் டொலர்களாக இருந்த மொத்த தேசிய உற்பத்தி 80 பில்லியன் டொலர்களாக 9 வருடங்களில் உயர்வடைந்தது. மஹிந்த சிந்தனை தசாப்தத்திலேயே இலங்கை ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை மிகப் பெரிய இடத்தை பிடித்தது.
நீங்கள் எந்த சர்வதேச தர நிலைகளை பார்த்தாலும் இதுதான் கதையாகும். இது ஏன்? காரணம் நாம் மஹிந்த சிந்தனையின் கீழ் தேசிய விடயங்களை நோக்கமாகக்கொண்டு நவீனதொழிநுட்பங்களின் அடிப்படையிலான செயற்பாட்டு ரீதியான கொள்கைகளை பின்பற்றினோம். 2015ஆம் ஆண்டு பின்னர் இது தொடர்ந்திருந்தால் எமது நாடு அபிவிருத்தியடைந்த நாடாக அடைந்திருக்கும்.அந்தவிடயம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பொருளதாhரத்தை கட்டியெழுப்புவது எனது இலக்காகும்.பாரம்பரிய ஏற்றுமதிகளுக்கு நாம் ஆதரவளிப்பதுடன சர்வதேச சேவைத்துறைகளான் கல்வி மற்றும் சுகாதாரத்துறை போன்றவற்றில் புதிய முதலீடுகளை அறிமுகப்படுத்த திட்டமிடுகிறேன். புதிய தொழில்வாய்புகளை உருவாக்கவேண்டும்.
இலங்கையில் உயர்மட்ட தொழில்நுட்ப உற்பத்திகளை முன்னெடுப்பது தொடர்பில் நான் ஏற்கனவே சர்வதேச பங்களார்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன்.நவீன தொழில் நுட்பத்தை பயன்பத்தி பொருளதாரத்தை வளல'ச'சஜயடை செய்வதை தவிர எமக்கு வேறுவழியில்லை.எந்தவொரு பிரச்சினையும் தீர்ப்பதற்கும் அதன் தன்மை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையை பொருத்தமட்டில் பிரதான பிரச்சினையாக இருப்பது வெளிநாட்டு கடன்களாகும்.பல்தரப்பு கடன்களை நாம் செலுத்திக்கொண்டிருக்கிறோம். 2027ஆம் ஆண்டு வரை இருதரப்பு கடன்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.பிணைமுறி கடன்கள் மீள செலுத்தப்படுவதில்லை. அவை இன்னும் மறுசீரமைக்கப்படவும் இல்லை.
எனவே, நாடு இன்னும் நெருக்கடியில் இருக்கிறது.பிணைமுறி கடன்களில் அதிகளவு பெறுமதியை யார் பெற்றது.நல்லாட்சி அரசாங்கமே 12.5 பில்லியன் டொலர்களை பெற்றுள்ளது. இங்கு தான் நெருக்கடியே இருக்கிறது.தற்போது இதற்கு என்ன தீர்வு? நாம் மற்றவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க முடியாது. நாம் அந்த கடன்களை மிகவிரைவாக மீள செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.வெளிநாட்டு வருமானத்தை பெறுவதே அதற்கு இருக்கும் ஒரே வழியாகும். இதற்கு நாம் சுற்றுலாத்துறையை விரிவுப்படுத்துவதுடன் வருடமொன்றுக்கு 80 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைக்க வேண்டும்.அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்கசெய்ய வேண்டும்.பெரிய மற்றும் நடுத்தர அளவிலான முதலீடுகளை அதிகரிப்பததுடன் புதிய வர்த்தகங்களுடனான ஏற்றுமதிகளை அதிகரிப்பது அவசியமாகும்.
அதேநேரம் ரூபா வருமானத்தை அதிகரிப்பதுடன் உள்நாட்டு கடன்களை செலுத்தவும் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்யவும் ரூபா வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.சுருக்கமாக இதுவே எமது பொருளாதார கொள்கையாகும். மேலதிக விரிவான விடயங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேள்வி வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப - நடைமுறை திறன்களை உள்ளடக்கிய நவீனமயப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தைக் கட்டியெழுப்புவதற்கான உங்கள் திட்டம் என்ன?
பதில் இரண்டு பிரதான கோணங்களில் நாம் கல்வித்துறையை பார்க்கிறோம்.முதலாவது மக்கள் சேவைக்கான அரசாங்க கல்வி மற்றும் சர்வதேச சேவைக்கான கல்வியாகும்.மஹிந்த சிந்தனை யுகத்திலேயே இலங்கையின் கல்வித்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.நாம் உள்நாட்டு பாடசாலைகளை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்வோம். அதேசமயம் சமூகத்துக்கும் சந்தைக்கும் தற்போது தேவையான வகையில் ஒரு வருடத்துக்குள் சகல பாடத்திட்டங்களையும் மீளாய்வு செய்வோம். கற்பிப்பவர்களுக்காக நாம் செயலாக்க முகாமைத்துவ முறை ஒன்றை அறிமுகப்படுத்துவோம். அதன் ஊடாக அவர்களது ஊக்குவிப்புகள் அவர்களது செயலாக்கத்தின் ஊடாக தீர்மானிக்கப்படும். இலங்கையை அமைதியான சர்வதேச கல்வி நிலையமாக முன்னேற்றுவதற்கு எம்மிடம் விரிவான திட்டம் உள்ளது.
கேள்வி கர்ப்பிணித்தாய்மார் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் எவை? குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருக்கும் மந்தபோசணை மற்றும் வளர்ச்சி குன்றல் ஆகியவற்றை சீர்செய்வதற்கு எத்தகைய திட்டங்களை வைத்திருக்கின்றீர்கள்?
பதில் சிறுவர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் எமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். எனவே சிறுவர்களுக்கு சமநிலையான போசாக்கு வெற்றிக்கொள்ளும் ஆளுமை மற்றும் ஒலி இசைவாக்கம் போன்றவற்றை வழங்குவதே எமது பொறுப்பாக இருக்கிறது.கிராம சிறுவர் பிரசவ சிகிச்சை நிலையங்கள் ஊடாக கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைகளுக்கு திரிபோஷ விட்டமின் உணவுகளையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சமுர்த்தி திட்டம் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஆரம்ப பாடசாலை கல்விக்கு மானியம் வழங்கப்படும். இலங்கையில் தாய்மார்கள் வெளிநாடுகளில் பணிபுரிதல், தந்தைமார் குடி மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமைஇ பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்தல், பிள்ளைகளை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளுவது என்பது மிக வேகமாக அதிகரிக்கும் சோக நிலைமையாக இருக்கிறது. அவ்வாறான குழந்தைகளுக்கு முறையான பெற்றோருக்குரிய பாதுகாப்பு முறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படுவதுடன் அதன் ஊடாக தேவையான வசதிகளும் கவனிப்பும் வழங்கப்படும். அவ்வாறான குழந்தைகளுக்கு மாதாந்தம் உதவிகளை வழங்குவதற்கு உள்நாட்டில் உள்ள மற்றும் வெளிநாட்டில் உள்ள பரோபகாரிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். அந்த உதவிகளின் ஊடாக மிக நெருக்கமாக கண்காணிக்கப்படும் ஒரு தொழில் செயற்பாடு அமுல்படுத்தப்படும். அதாவது இந்த குழந்தைகளுக்கு உணவு தயாரித்தல் மற்றும் கவனிப்புகளை செய்வதற்காக சமுர்த்தி உதவிப்பெறும் தாய்மார்கள் தொண்டர்களாக செயற்படுவார்கள்.
கேள்வி விவசாயத்தை இலாபகரமான மற்றும் நிலைபேறான துறையாக மாற்ற உங்கள் திட்டங்கள் என்ன? தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா, மிளகு, வெற்றிலை உள்ளிட்ட ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பீர்கள்?
பதில் விவசாயத்துக்கு தேவையான நீர், விதைகள் மற்றும் உரம் என்பன உத்தரவாத விலைக்கேற்ப, தேவைக்கேற்ப விளைநிலங்களுக்கு விநியோகிக்கப்படும். இதன் ஊடாக விவசாயிகளின் முதலீட்டுக்குரிய வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
நவீன தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக விவசாயிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் ஊடாக உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பில் விவசாய கூட்டுறவு வலுபெறும். இதனால் சிறிய மற்றும் பாரியளவிலான ஏற்றுமதி இனங்காணப்பட்ட வேறுபாட்டை தவிர்க்கலாம். காரணம் தற்போது கறுவா, மிளகு மற்றும் ஏலக்காய் போன்ற உற்பத்திகள் பாரிய உற்பத்திகளான தேயிலை, தெங்கு மற்றும் இறப்பர் உற்பத்தியோடு சந்தையில் போட்டியிடுகின்றன.
கேள்வி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்புணர்வு மற்றும் ஒடுக்குமுறைத்தாக்குதல்களைத் தடுப்பதற்கு உங்கள் நிர்வாகம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றை எவ்வாறு உறுதிசெய்வீர்கள்?
பதில் இந்த உதவிகள் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும். இதன் ஊடாக பெண்கள் சிறியவிலான மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிட்டும். மேலும் பெண்களுக்கான சமஉரிமை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகிறது.அதேவேளை பெண்களது பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உதவியளிக்கும் வகையில் விசேட துரித எண்கள் மற்றும் தொலைபேசி பயன்பாடு என்பன ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.
கேள்வி பால்புதுமையின சமூகத்தினரின் உரிமைகள்இ கருக்கலைப்பு மற்றும் தெரிவுசெய்வதற்கான உரிமை என்பன தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்?
பதில் இரண்டாயிரம் ஆண்டுகளில் நாமே நாகரிகமான வரலாற்றை ஏற்படுத்துகிறோம். நாம் முதுமை கலாசாரத்தை மதிக்க வேண்டும். மேலைத்தேய சித்தாந்தங்களை போன்று எமது கலாசாரத்தை மாற்றியமைக்க முடியாது.ஆனால் நாம் வேறுபட்ட மத கலாசாரங்களை மதிக்கிறோம். ஆகவே எமது நாட்டின் சட்டத்திட்டத்துக்கேற்ப சமத்துவம் நிலைநாட்டப்படும் என்பதை நம்புகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM