ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கினோம் ; சஜித் பிரேமதாச !

18 Sep, 2024 | 10:40 AM
image

கல்வித்துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்பி உள்ளோம். குறித்த அதிகாரிகளிடமும் கேள்வி எழுப்பி உள்ளோம்.

கேள்வி எழுப்புவதோடு மாத்திரம் மட்டுப்படாமல் கல்வி அமைச்சரோடு பல சந்தர்ப்பங்களில் பல்வேறு துறையினரை தொடர்பு படுத்தி கேள்வி எழுப்பியதோடு மாத்திரம் நின்று விடாமல் அதற்கான பதிலை பெற்றுக் கொள்வதற்கும் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (17)  நடைபெற்ற ஐக்கிய கல்விச் சேவை அதிகாரிகளுடனான ஐக்கிய கல்வி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  இவ்வாறு தெரிவித்தார்.  

இவரை் மேலும் தெரிவிக்கையில்,    

கல்வி நிர்வாகம், கல்வி அதிபர் சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவை, ஆசிரியர் சேவை, ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், கல்வி சாரா ஊழியர்கள், பிரிவேனாக் கல்வி, அறநெறி கல்வி, பல்கலைக்கழக கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் குறித்து அக்கறை செலுத்துகின்றோம்.   

இந்த அனைத்து துறைகள் குறித்தும் விரிவாகவும் சார்பாகவும் செயற்படுவதன் ஊடாக அந்தந்த துறைகளில் காணப்படுகின்ற முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் என்பனவற்றுக்கு வழங்கக்கூடிய சிறந்த தீர்வினை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக வழங்குவோம்.   

எமது நாட்டின் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். கல்வித்துறையில் உலகில் உயர்ந்த தரத்தில் உள்ள நாடுகளின் கல்வி மட்டத்திற்கு சர்வதேச பணியாளர் சந்தையை மையப்படுத்தி அதன் கேள்விகளுக்கும் விநியோகத்திற்கும் ஏற்றவாறு பாட விதானங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இடம் பெறுகின்ற போது  திறமையும் தேர்ச்சியுமுடைய சேவையாளர்கள் உருவாக்குவோம்.   

கல்வித்துறையில் அவ்வாறான காத்திரமான மாற்றங்களை கொண்டு வருவதற்கு எதிர்பார்த்து இருக்கின்றோம். தகவல் தொழில்நுட்பம், கணிணி விஞ்ஞானம், விஞ்ஞானம், கணிதம், போன்ற பிரிவுகளை மையப்படுத்திய பாடவிதானங்கள் இந்தப் பிரிவுக்குள் வலுப்படுத்தப்படும். 

இந்த நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவோம். இலவசக் கல்வியின் ஊடாக அனைத்து பல்கலைக்கழகங்களையும் சகல வசதிகளையும் கொண்ட பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம். பௌதிக வளங்களின் தேவையை புதிய முறையில் சிந்தித்து 10096 பாடசாலைகளையும் பலப்படுத்துவோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே...

2025-02-10 17:33:38
news-image

பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும்...

2025-02-10 17:32:35
news-image

மன்னார் மக்களுக்கு சீனாவால் நிவாரண பொருட்கள்...

2025-02-10 17:34:41
news-image

நிட்டம்புவையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-02-10 17:06:47
news-image

யாழ். தையிட்டி விகாரை உடைக்கப்படவேண்டும்! -...

2025-02-10 16:42:00
news-image

மாகாண சபை முறைமை என்பது தாம்...

2025-02-10 16:22:10
news-image

முல்லைத்தீவில் மரக்குற்றிக் கடத்தல் முறியடிப்பு :...

2025-02-10 16:26:54
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 17:30:36
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09