ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று புதன்கிழமை (18) நள்ளிரவுடன் நிறைவடைகின்றன.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை இன்றைய தினம் நடத்தவுள்ளனர்.
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க
சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் கொழும்பு கிராண்ட்பாஸ், மாத்தறை, காலி, களுத்துறை, ஹோமாகம மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. இறுதிப் பிரச்சாரக் கூட்டம் மருதானையில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் காலி, பேருவளை மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் டவர் ஹொலுக்கு முன்பாக நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் களுத்துறை, கம்பஹா மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளன. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நுகேகொடையில் நடைபெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் திஸ்ஸமஹாராம மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. அவரது இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தலையில் நடைபெறவுள்ளது.
சர்வஜன சக்தியின் வேட்பாளர் திலித் ஜயவீர
சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் போராட்டம் முன்னணியின் வேட்பாளர் நுவன் போககே
மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொடை பகுதியில் நடைபெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM