இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியா கடும் ஆர்வம் - ஜனாதிபதி ரணில்

Published By: Digital Desk 7

18 Sep, 2024 | 08:47 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாக உளள்ளது. எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலும் அடுத்தப்படியாக  மாகாண சபை தேர்தலும் நடைப்பெறும். இலங்கையின் தேர்தல் குறித்து இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் பங்களதேசத்தின் நிலைமைகளின் பின்னர் இலங்கையின் அரசியல் ஸ்தீர நிலைமை குறித்து டெல்லி அக்கறையுடன் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப்பெறுவது உறுதியான விடயமாகும். எனவே பிளான் ' பி ' குறித்து பேச வேண்டிய தேவையில்லை.  சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் எதிர்காலத்தில் என்றோவொரு நாள் ஜனாதிபதியாவார்கள். ஆனால் இம்முறை சாத்தியமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஊடகவியலாளர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனாதிபதி முறைமை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்வது மற்றும் 13 ஆவது திருத்தம் போன்றவை குறித்து பேசி காலத்தை வீணடித்துள்ளோமே தவிர நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து யாரும் அவதானம் செலுத்த வில்லை. எனவே தான் எனது இலக்கை பொருளாதாரத்திற்குள் வைத்துள்ளேன். அதனை மையமாக கொண்டே கொள்கைகளை வகுத்துள்ளேன்.

குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த யாரும் அதனை செய்ய வில்லை. இந்த கதிரையில் அமர்ந்த யாரும் அதனை செய்ய மாட்டார்கள் என்று ஜே.ஆர். ஜயவர்தன அன்று எனக்கு கூறியமை இன்றும் நினைவில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியம்

நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்திய தேர்தலாகவே சனிக்கிழமை இடம்பெற கூடிய ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது. சிறந்த பொருளாதார கொள்கையுடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதன் அவசியம் குறித்து சிந்திக்கப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது எனது நிலைப்பாடாகும். ஆனால் ஏனைய வேட்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதா ? இல்லையா ? என்பதை தீர்மானிக்க வேண்டும்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட வரைபுக்குள் உட்பட்டதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு இடைவெளியை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பில்லியனாகும். இதனை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் எமது மொத்த தேசிய வருமானத்திற்கு அமைவாக 5 வீதத்தை கடனாக பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அனுமதியளிக்கிறது.

ஆனால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வரவு - செலவு திட்டம் குறித்து பேச வில்லை. இருப்பினும் அவர்களது தேர்தல் வி ஞ்ஞாபணத்தை அடிப்படையாக கொண்டு ஜே.வி.பியின் வரவு - செலவு திட்டத்தை கணிப்பிட்டால் வரவு - செலுவு திட்ட இடைவெளி 4 பில்லியன் டொலர்களாகும். இத்தொகையினை மொத்த தேசிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், 11.2 வீதமாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறும் வகையிலேயே இந்த எண்ணிக்கை உள்ளது. மீறி செயல்பட்டால் நாணய நிதியத்திலிருந்து வெளியேறும் நிலை உருவாகும். இதன் பின்னர் ஏற்பட கூடிய நாட்டின் பொருளாதார நிலைகள் டொலர் ஒன்றின் பெறுமதியை 500 ரூபாவுக்கு கொண்டு செல்லும். எனவே இது குறித்து விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் யாரும் வருவதில்லை.  

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் அமையப்பெறும் புதிய ஆட்சி இதுவரையில் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெளிவாக கூறியுள்ளது. அனுரகுமார திசாநாயக்கவோ சஜித் பிரேமதாசவோ சர்வதேச நாணய நிதியத்துடன் தேர்தல் விஞ்ஞாபணத்தில் குறிப்பிட்டுள்ள விடங்கள் குறித்து பேச வில்லை என்பதே உண்மை. மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.

பெறுமதி வரிசேர் வரியை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார் என்றால், இன்றிலிருந்தே மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை சேமித்து வைக்க வேண்டும். எனவே தற்போதைய பொருளாதார திட்டங்களில் இருந்து விலக இயலாது.

இன்னும் இரு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை அவர்களுக்கு கூற வேண்டும்.

ஊழல் ஒழிப்பு திட்டம்

ஊழலை ஒழிக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழல் மோசடி குறித்து 400 கோப்புகள் உள்ளன. அவற்றை விசாரிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போன்று மோடிகள் ஊடாக சம்பாதித்த சொத்துக்களை அரச உடைமையாக்குவதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்புக்கான 5 ஆண்டுகால திட்டத்தை தயாரித்து வருகின்றோம்.

இவற்றை புதிய சட்டங்கள் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும். எனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அப்போது தான் ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் , புதிய சட்டங்களை நடைமுறைபடுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளோம்.

ஆனால் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் சட்டங்கள் குறித்து பேசாது திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றனர். வரவு - செலவு திட்டத்திற்கு தேவையான நிதியை திருடர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் பெற்றுக்கொள்வதாக இருவருமே கூறுகின்றனர். அது சாத்தியமான விடயமல்ல.

ஏனெனில்  சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்து அவர்களிடம் மோடி செய்து பெற்றக்கொண்ட சொத்துக்களை பெற்றுக்கொள்ள குறைந்தது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் சுமார் 10 வருடம் ஆகலாம். அது வரைக்கும் வரவு - செலவு திட்டம் இல்லாது எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்.

மக்களை ஏமாற்ற கற்பணை கதைகளை கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை அவர்கள் பேசுவதில்லை. புதிய சட்டங்களை நிறைவேற்றி திருடர்களை பிடிக்க யதார்த்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள்

சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதாக அனுரகுமார திசாநாயக்க கூறுகின்றார். அவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்க முடியாது.

உதாரணமாக இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து வெளியில் வந்தால், அந்த நாடு இலங்கையுடன் சினம் கொள்ளும். நாடு  அநாவசியமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதில் சிறந்த விடயம் யாதெனில் அனுரவோ சஜித்தோ அதிகாரத்திற்கு வர போவதில்லை.

குறைப்பாடுகள் இருந்தால் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் தனித்து தீர்மானங்களை எடுக்க கூடாது.  கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாக ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.

ஜப்பான் இலகு ரயில் திட்டத்திற்கான நிதி இலங்கைக்கு கிடைக்காமல் போனது. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான திட்டங்களை நிறுத்தினால் பாதிக்கப்பட போவது நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 நட்பு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கைக்கு இல்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட உத்தேசித்துள்ளோம்.

மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் எவ்விதமான மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில அதிகார போட்டி நிலை பிராந்தியத்தில் உள்ளது.

எவ்வாறாயினும் அந்த நாடுகளுடன் நீண்ட காலமாக இராஜதந்திர நிலையில் தொடர்புகளை பேணி வருகின்றோம். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்  சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36