ஹெஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து சிதறிய சம்பவத்திற்கு இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு – 9 பேர் பலி – 3000 பேர் காயம் - அதிர்ச்சியில் லெபனான்

Published By: Rajeeban

18 Sep, 2024 | 07:41 AM
image

ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் திடீரென வெடித்துச்சிதறியதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் குழந்தையொன்று உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000 பேர் காயமடைந்துள்ளனர்.

பெய்ரூட்டின் தென்பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளிலும் லெபானின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

பல பேஜர்கள் வெடித்துச்சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பின் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் தரையில் அமர்ந்திருப்பதையும் ஏனையவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

கடைகளில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை சிசிடிவிகள் காண்பித்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2800 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனானிற்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஹெஸ்புல்லா அமைப்பு தனது பல பிரிவுகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்துச்சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இஸ்ரேலே இதற்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள ஹெஸ்புல்லா அமைப்பு பதில்நடவடிக்கை குறித்து எச்சரித்துள்ளது.

செவ்வாய்கிழமை சம்பவம் காரணமாக லெபனான் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்இமுன்னருபோதும் இடம்பெற்றிராத இத்தைகைய சம்பவத்தை நம்பமுடியாத நிலையில் லெபனான் மக்கள் காணப்படுகின்றனர்.

கையடக்க தொலைபேசிகள் ஹக் செய்யப்படலாம் அல்லது கண்டுபிடிக்கப்படலாம் என்பதற்காக தங்கள் உறுப்பினர்கள் பயன்படுத்திவரும் பேஜர்கள் பெருமளவில் வெடித்துச்சிதறின என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

வணிகவளாகத்தில் நபர் ஒருவரிடமிருந்த பேஜர் வெடித்துச்சிதறுவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளனஇஅவர் நிலத்தில் விழுந்து கிடந்து வலியால் துடிக்கின்றார்இஏனையவர்கள் அங்கிருந்து விலகி ஓடுகின்றனர்.

காயமடைந்த பெருமளவானவர்களை ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளிற்கு விரைந்தனஇகாயமடைந்தவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சர் தெரிவித்தார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பெய்ரூட்டின்அஷ்ரபீஹ்மாவட்டத்தில் உள்ள LAU மருத்துவ மையம் அதன் பிரதான வாயிலை மூடிஇ உள்ளே வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது. "இவை மிகவும் உணர்வுபூர்வமான பயங்கரமான காட்சிகள் எனஇது மிகவும் உணர்திறன் மற்றும் சில காட்சிகள் பயங்கரமானவை" என்று ஒரு ஊழியர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான காயங்கள் இடுப்பு முகம் கண்கள் மற்றும் கைகளில் காணப்பட்டனஎன அவர் கூறினார் "நிறைய உயிரிழப்புகள் .விரல்களை இழந்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில் அவை அனைத்தும்".

ஈரானிய தூதர் மொஜ்தாபா அமானியின் மனைவி வெடிப்புகளால் காயமடைந்துள்ளார் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எட்டு போராளிகள் கொல்லப்பட்டதாக ஹெஸ்பொல்லாவின் ஊடக அலுவலகம் அறிவித்தது. அந்த இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்த விவரங்களை அது வழங்கவில்லை அவர்கள் "ஜெருசலேமுக்கு செல்லும் வழியில் உயிர்த்தியாகம் செய்தனர்" என்று மட்டுமே கூறியது.

கொல்லப்பட்டவர்களில் ஹெஸ்பொல்லா எம். பி. அலி அம்மரின் மகனும் பெக்கா பள்ளத்தாக்கில் ஹெஸ்பொல்லா உறுப்பினரின் 10 வயது மகளும் அடங்குவதாக குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. பின்னர் மற்றொரு சட்டமன்ற உறுப்பினரான ஹசன் ஃபட்லல்லாவின் மகன் காயமடைந்ததாகவும் அவர் இறந்துவிட்டதாக ஆரம்பத்தில் தெரிவித்ததாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகத்தின் கூற்றுப்படி நாட்டின் உள்நாட்டுப் போரில் ஹெஸ்பொல்லா அரசாங்கப் படைகளுடன் இணைந்து போராடும் அண்டை நாடான சிரியாவில் பேஜர்கள் வெடித்ததில் பதினான்கு பேர் காயமடைந்தனர்.

"

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1...

2024-10-03 15:35:20
news-image

லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான...

2024-10-03 15:01:24
news-image

வியட்நாம் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல்...

2024-10-03 14:22:09
news-image

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு...

2024-10-03 09:39:09
news-image

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம்...

2024-10-03 06:01:40
news-image

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர்...

2024-10-02 20:33:33
news-image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள்...

2024-10-02 17:11:01
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன்...

2024-10-02 10:41:05
news-image

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் -...

2024-10-02 08:09:28
news-image

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் -...

2024-10-02 06:40:53
news-image

இஸ்ரேலிய தலைநகரில் துப்பாக்கி தாக்குதல் -...

2024-10-02 06:17:03
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை...

2024-10-02 05:54:56