தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு; பிரசார நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Vishnu

18 Sep, 2024 | 03:06 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ,  திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர்.இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க

சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது.

இதனால் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ் வீதி,ஜோகஸ் வீதி, லெயார்டிஸ் போட்வே வீதி, கிரான்ட்பாஸ் வீதி, பராக்கிரம வீதி மற்றும் கொஸ்கஸ் சந்தி ஆகிய பகுதிகளின் பொது போக்குவரத்தில் நெரிசல் நிலை ஏற்படும்.

அவிசாவெல்ல வீதி ஊடாக கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்கள் கிரான்ட்பாஸ் வீதியை பயன்படுத்தாமல் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

மருதானை மற்றும் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கராஜ மாவத்தை, பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி ஆகிய பாதைகளில் பொது போக்குவரத்து நடவடிக்கைளில் நெரிசல் ஏற்படும். ஆகவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க,

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதனால் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தை, நாவல வீதி,  பாகொட வீதி, ஆகிய பகுதிகளின் பொது போக்குவரத்து பாதிக்கப்படும் அல்லது நெரிசல் ஏற்படும். ஆகவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சர்வஜன சக்தியின் வேட்பாளர் திலித் ஜயவீர,

சர்வஜன சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று  பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

மக்கள் போராட்டம் முன்னணியின் வேட்பாளர் நுவன் போககே

மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால் பிரச்சாரக் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், மாற்று வீதிகளை பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க,

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டியிடுகின்றனர். பிரச்சார நடவடிக்கைகளுக்கு  34 நாட்கள் வழங்கப்பட்டன. தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் சமவுரிமை வழங்குமாறு வலியுறுத்தி ஊடக நெறி கோவையை வெளியிட்டோம்.

ஒருசில ஊடகங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன.தேர்தல் பிரச்சாரங்களுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும். வேட்பாளர்களும் இஅவர்களின் ஆதரவாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட கருத்தை பகிர்வதாக குறிப்பிட்டுக் கொண்டு சிவில் பிரஜைகள் சமூக வலைத்தளங்களில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்துக்களை பதிவேற்றம் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சுதந்திரமாகவும், நியாயமானதாகவும் தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41