(எம்.ஆர்.எம்.வசீம்)
பொருளாதாரத்தை முன்னேற்றி, நாட்டை அபிவிருத்தி செய்துவரும் தற்போதைய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நாட்டை மீண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்வதா என்பதை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. மக்கள் சரியான தீர்மானம் எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் சட்டச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து, தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் இன்றுடன் முடிவடைகின்றன. இன்னும் ஒரு சில தினங்களில் இந்த நாட்டுக்கான தலைவரை தெரிவு செய்துகொள்வதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு கிடைக்கிறது.
அதனால் பொருளாதாரத்தை முன்னேற்றி, நாட்டை அபிவிருத்தி செய்துவரும் தற்போதைய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதா? அல்லது கடந்த காலங்களைப்போன்று நாட்டை மீ்ண்டும் அராஜக நிலைக்கு கொண்டு செல்ல இடமளிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் சரியான தீர்மானம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
போட்டியிடும் வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதில் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே செய்ய முடியுமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி இரண்டு முறை ஆயுத முனையில் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்த குழுவாகும்.
அவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்து, மூன்று மாதங்களில் ஆட்சியை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். அப்போது, மக்கள் அமைதியை இழந்து செயற்பட முற்படும்போது அவர்கள் ஆயுதத்தால்தான் நாட்டை நிர்வகிக்க முற்படுவார்கள்.
அதனால் மக்கள் விடுதலை முன்னணி ஆயுத முனையில் நாட்டை நிர்வகிப்பதற்கு விருப்பம் என்றால், அவர்களுக்கு வாக்களிக்க முடியும். ஏனெனில் தங்களின் ஆட்சிக்கு எதிராக அடக்குமுறைகள் ஏற்படும்போது அரச அதிகாரம் இராணுவ அதிகாரம் மற்றும் தங்களின் கட்சி அதிகாரத்தை பயன்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் லால்காந்த தெரிவித்திருக்கிறார். அதனால் அனுரகுமாரவை அதிகாரத்துக்கு கொண்டுவந்து ஆயுத முனையில் மக்களை நிர்வகிப்பதை யாரும் அனுமதிக்கப்போவதில்லை.
அதேபோன்று குடும்ப ஆட்சியும் இந்த நாட்டில் தற்போது மக்களால் வெறுக்கப்பட்டதொன்றாகும். சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் குடும்ப ஆட்சியே ஏற்படும். ஏனெனில் சஜித் பிரேமதாச தனது தாய் ஹேமா பிரேமதாச, தனது மனைவி, சகோதரி மற்றும் தனது நண்பன் லக்ஷ்மன் பொன்சேகா ஆகியோர் சொல்வதை மாத்திரமே அவர் கேட்பார். அதனால் சஜித் வெற்றிபெற்றால் மீ்ண்டும் குடும்ப ஆட்சியே ஏற்படும்.
அதனால் தற்போதுள்ள வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் மாத்திரமே மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் நாட்டில் நிம்மதியாக வாழமுடியுமான சூழல் ஏற்படும். நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM