(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு சென்றுள்ளார். இந்திய விஜயம் பாரிய சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி , பாராளுமன்றத்திற்கு அறிவிக்காது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டால் மோசமான நிலைமைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் குறிப்பிட்டார். 

கூட்டு எதிர் கட்சியின் விஷேட ஊடக சந்திப்பில் பொரல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நடைப்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.