(எம்.ஆர்.எம். வசீம்)
வெற்றி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க இருக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் தங்களை வாக்குகளை வீணடிக்காமல் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியின் பங்காளிகளாக வேண்டும் என முன்னாள் அமைச்சர் அசல ஜாகொட தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அனைத்து தகவல்களின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ரணில் விக்ரமசிங்க தான் தோல்வியடைவதாக அச்சம் கொண்டுள்ளதால் தேர்தல் நடத்த மாட்டார் என சஜித் பிரேமதாச ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயம் உண்மையாகும். தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு இருந்தமையாலே அவர் தேர்தலில் போட்டியிட தைரியமாக முன்வந்தார்.
அத்துடன் இடம்பெற இருக்கும் தேர்தலில் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கிடையிலேயே பாேட்டி இடம்பெறுகிறது. அந்த வகையில் இந்த தேர்தலில் வாக்குள் எவ்வாறு பிரிந்து செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பது தொடர்பில் பகுப்பாய்வு செய்து பார்த்ததிலும் ரணில் விக்ரமசிங்கவுக்கே அதிகமான வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நாட்டில் 170 இலட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் சுமார் 140 இலட்சம் வாக்குகள் அளிக்கப்படும். அதிலும் சுமார் 135 இலட்சம் வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக அமைந்தால், அந்த 135இலட்சம் வாக்குகளை 3ஆக பிரித்து பார்க்கும்போது, வெற்றி வாய்ப்பை அடைவதற்கு ஒரு வேட்பாளர் 46 இலட்சம் வாக்குகளை பெறவேண்டும்.
அந்த இலக்கை இந்த பிரதான மூன்று வேட்பாளர்களில் யாருக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிட்டு பார்ப்போமானால், அனுர குமார திஸாநாயக்க கடந்த தேர்தலில் 5 இலட்சம் வாக்குகள் பெற்றுக்கொண்டார்.
இந்த முறை அவருக்கு வடக்கு கிழக்கு மலையக வாக்குகள் என 2இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்றிருந்தால். அவருக்கு 7இலட்சம் வாக்குகளே இருக்கின்றன. அவர் வெற்றி வாய்ப்புக்கான 46 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்ள இன்னும் 39 இலட்சம் வாக்குகளை பெற வேண்டி இருக்கிறது.
அதேபோன்று சஜித் பிரேமதாசவுக்கு கடந்த பொதுத் தேர்தலில் 28 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தலில் அவருக்கு வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் இருந்து 8 இலட்சம் வாக்குகள் கிடைத்தால் அவருக்கு 36 இலட்சம் வாக்குகள் கிடைக்கும். அப்போது 46 இலட்சம் வாக்குகள் என்ற அந்த எல்லையை அடைவதற்கு இன்னும் 10இலட்சம் வாக்குகள் தேவைப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த பொதுத் தேர்தலில் 2இலட்சம் வாக்குகள் கிடைத்தன. அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சுமார் 20 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் அந்த வாக்குகளில் 15இலட்சம் இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கும்.
அதேபோன்று இந்த தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக வாக்குகளில் 15 இலட்சம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கும் என நினைத்தால், அவருக்கும் 32இலட்சம் வாக்குகள் கிடைக்கும். அதேநேரம் அவர் 46இலட்சம் என்ற எல்லையை அடைவதற்கு இன்னும் 14இலட்சம் வாக்குகள் தேவைப்படுகின்றன.
ஆனால் இந்த பிரதான மூன்று வேட்பாளர்களும் 46இலட்சம் என்ற எல்லையை அடைவதற்கு, கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு கடைக்கப்பெற்ற 68இலட்சம் வாக்குகளில் இருந்தே பிரித்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதன் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்க சுமார் 39 இலட்சம் வாக்குகளை பெறவேண்டும். சஜித் பிரேமதாச 10இலட்சம் வாக்குகளை பெறவேண்டும்.
ரணில் விக்ரமசிங்க 14 இலட்சம் வாக்குகளை பெறவேண்டும். இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவில் இருந்து 90க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கின்றனர். அதேபோன்று பிரதேச சபை உறுப்பினர்கள் பாரியளவிலானவர்கள் ஆதரவளிக்கின்றனர்.
அதனால் பொதுஜன பெரமுனவின் 68இலட்சம் வாக்குகளில் 14இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்புக்கு செல்வதற்கு பெற வேண்டிய 46 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக இலகுவில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
அதனால் எவ்வாறு கணக்கு போட்டு பார்த்தாலும் வெற்றிபறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பது ரணில் விக்ரமசிங்கவுக்காகும். அதனால் வேறு வேட்பாளருக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் தங்களின் முன்னாள் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால், உங்கள் வாக்குகளை வீணடிக்காமல் ரணில் விக்ரமசிங்கவை அதிக வாக்குகளால் வெற்றிபெறச்செய்து, அந்த வெற்றியின் பங்குதாரிகளாக மாறுவதற்கு முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM