'சிங்கப்பூர் சலூன்', 'ஜோஸ்வா இமைப் போல் காக்க' , 'பி டி சார்' என வரிசையாக தோல்வி படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படத்தை 'கொமர்ஷல் கிங்' சுந்தர். சி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியான 'அரண்மனை 4' எனும் திரைப்படம் இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை பட்டியலில் இடம் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் தயாராகிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'மூக்குத்தி அம்மன்' படத்தின் முதல் பாகத்தை விட வித்தியாசமான முறையில் சோசியோ, ஸ்பிரிச்சுவல் ஜேனரில் பிரம்மாண்டமாக தயாராவதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தத் திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் , அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் , பி 4 யூ மோஷன் பிக்சர்ஸ் , ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தீய சக்திக்கும், இறை சக்திக்கும் இடையேயான மோதலை உணர்வு பூர்வமாகவும், கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவும், ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை பட மாளிகையில் வழங்குவதாகவும் இருக்கும் என்பதால் சுந்தர். சி -நயன்தாரா கூட்டணியில் உருவாகும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM