இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய் அண்டனி

Published By: Digital Desk 2

17 Sep, 2024 | 03:20 PM
image

விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்து எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'ஹிட்லர்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பங்கு பற்றிய படத்தின் நாயகனான விஜய் அண்டனி மேடை ஏறிய பிறகு கௌதம் வாசுதேவ் மேனன், படத்தின் நாயகியான ரியா சுமன், படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா மற்றும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டு தான் ஒரு காதல் காட்சியில் நடிப்பதற்கான ஒத்திகையை காதலை ரசிகர்கள் விரும்பும் வகையில் வித்தியாசமாக இயக்கம் கௌதம் வாசுதேவ் மேனன் முன்னிலையில் மேற்கொண்டார்.

 இது வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு கலகலப்பான அனுபவத்தை அளித்தது.

இயக்குநர் எஸ். ஏ. தனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த 'ஹிட்லர்' எனும் திரைப்படத்தில் விஜய் அண்டனி, ரியா சுமன், கௌதம் வாசுதேவ் மேனன், விவேக் பிரசன்னா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 விவேக் , மெர்வின் இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்தது. 

எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. டி ராஜா மற்றும் டி ஆர் சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right