புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4 வகையினதான கதிர்வீச்சு சிகிச்சை...!?

Published By: Digital Desk 2

17 Sep, 2024 | 03:21 PM
image

இன்றைய திகதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் வகையில் கதிர்வீச்சு சிகிச்சை, நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று அத்துறை நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.

புற்றுநோய் பாதிப்பு எந்த உறுப்பில் ஏற்பட்டாலும்.. முதலில் புற்றுநோய் பாதிப்பின் நிலையை உரிய பரிசோதனைகள் மூலம் வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானிப்பார்கள்.

புற்றுநோய் கட்டியின் அளவைப் பொறுத்து அதனை கதிர்வீச்சு சிகிச்சையின் மூலம் முழுமையாக அகற்ற இயலுமா? என்பதையும் அவதானித்து, அத்தகைய சிகிச்சையை வழங்குவர்.

இதற்கு மருத்துவ மொழியில் பிரைமரி ரேடியேஷன் தெரபி என குறிப்பிடுகிறார்கள். கருப்பை வாய் புற்றுநோய், கழுத்து மற்றும் தலையில் ஏற்படும் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய்,  அந்தரங்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் ஆகிய புற்றுநோய் பாதிப்புகளை இத்தகைய பிரைமரி ரேடியேஷன் தெரபி எனும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும்.

சில புற்றுநோய் கட்டிகளின் அளவு சத்திர சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருக்கும்.

இந்த தருணத்தில் புற்றுநோய் கட்டிகளின் அளவை குறைப்பதற்காக கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொள்வர்.

இத்தகைய கதிர்வீச்சு சிகிச்சையை நியோ அட்ஜுவன்ட் ரேடியேஷன் தெரபி என மருத்துவமனையில் குறிப்பிடுவார்கள்.

இத்தகைய கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் கட்டியின் அளவு குறைந்து அதனை சத்திர சிகிச்சைகள் மூலமாக அகற்றி நிவாரணம் வழங்குவார்கள்.

வேறு சிலருக்கு புற்றுநோய் கட்டிகளை சத்திர சிகிச்சைகள் மூலமாகவும், கீமோ தெரபி மூலமாகவும் முழுமையாக அகற்றி இருப்பார்கள்.

இவர்களுக்கு புற்றுநோய் கட்டிகள் கண்ணுக்குத் தெரியாத இடங்களில் பரவி இருந்தாலோ அல்லது மீண்டும் அவ்விடத்தில் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்குவார்கள்.

இதற்கு மருத்துவ மொழியில் அட்ஜுவன்ட் ரேடியேஷன் தெரபி என குறிப்பிடுவார்கள். இந்த மூன்று கதிர்வீச்சு சிகிச்சைகளும் புற்றுநோய் கட்டிகள் முழுமையாக அகற்றப்பட்டு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

இதனைத் தவிர்த்து மூளையில் கட்டி பாதிப்பு ஏற்பட்டால். அதற்கான வலி நிவாரண சிகிச்சையாகவும் கதிர்வீச்சு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதனை மருத்துவ மொழியில் பல்லியேடிவ் ரேடியேஷன் தெரபி என குறிப்பிடுவார்கள். சிலருக்கு மட்டுமே புற்றுநோய் பாதிப்பின் தன்மை மற்றும் வீரியத்தை துல்லியமாக அவதானித்த பிறகு கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோ தெரபியை ஒருங்கிணைந்து வழங்கி நிவாரணத்தை அளிப்பார்கள்.

வைத்தியர் அன்பரசி

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடுக்கத்துக்கு நவீன சிகிச்சை

2024-10-09 19:17:56
news-image

டிரிக்கர் ஃபிங்கர் எனும் கை விரலில்...

2024-10-08 17:11:34
news-image

கருவிழி மாற்று சத்திர சிகிச்சை...!?

2024-10-05 17:31:43
news-image

அறிவாற்றல் குறைபாடு பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-10-04 17:07:05
news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17