எம்மில் சிலர் அரசாங்க வேலை வாய்ப்புக்காக காத்திருக்காமல் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கடன் வாங்கி, சிறிய அளவிலான விற்பனை நிலையத்தை தொடங்கி, தொழில் முனைவோராக தங்களது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல தொடங்கி இருப்பர்.
தொடக்க நிலையில் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்ந்து தங்களது விற்பனையை மேம்படுத்தி லாபத்தையும், மகிழ்ச்சியையும் சம்பாதித்துக் கொண்டிருப்பார்கள்.
இதனைத் தொடர்ந்து விற்பனை நிலையத்தை விரிவுபடுத்தவோ அல்லது விற்பனையை மேம்படுத்தவோ திட்டமிட்டு பணியாற்றுவர். இந்த தருணத்தில் விற்பனை நிலையத்தின் அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்ள சில தொழிலாளர்களை நியமிப்பர்.
இவர்கள் உழைப்பதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தையும் கவனித்துக் கொள்வர். இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன் அவர்களின் நலன்கள் மீதும் அக்கறை செலுத்துவார்கள்.
இந்த தருணத்தில் திடீரென்று எதிர்பாராத வகையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கி விடும். இதன் காரணம் என்ன என துல்லியமாக அவதானிப்பதற்குள் விற்பனை நிலையம் நஷ்டத்தில் இயங்க தொடங்கும்.
இதன் போது பெரும்பாலான வணிகர்கள் நஷ்டத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக ஆன்மீக முன்னோர்களையும், சோதிட நிபுணர்களையும் அணுகுவர். அவர்களும் சோதிடம், பிரசன்னம், வாஸ்து ஆகிய விடயங்களை கணக்கிட்டு பரிகாரத்தை முன்மொழிவர்.
அதன் பிறகும் வியாபாரம் முன்பு போல் இல்லாமல் சற்று குறைவான அளவிலேயே நடந்து கொண்டிருக்கும். இவர்களுக்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிமையானதொரு பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள் : வெண்கடுகு, அகல் விளக்கு, நல்லெண்ணெய், திரி.
விற்பனை நிலையத்தில் மக்களின் பார்வை அதிகம் புழங்கும் இடத்தில் இரண்டு கைப்பிடி அளவிற்கு வெண் கடுகினை வைத்து விட வேண்டும்.
அதன் மீது நல்லெண்ணெய் மற்றும் திரியுடன் கூடிய அகல் விளக்கை ஏற்ற வேண்டும்.
வெண் கடுகு மீதான அகல் விளக்கு எரியும் போது உங்களையும் அறியாமல் உங்களது விற்பனை நிலையத்தின் மீது வாடிக்கையாளர்களாலும், உறவினர்களாலும், நண்பர்களாலும், அக்கம் பக்கத்து விற்பனை நிலையத்தின் உரிமையாளர்களாலும் ஏற்பட்ட கண்ணேறு அழிய தொடங்கும்.
இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி தொடர்ந்து 21 நாட்கள் வரை ஏற்றி வழிபட வேண்டும். 21 நாட்களுக்குப் பிறகு உங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து மீண்டும் விற்பனை பழைய நிலைக்கு திரும்புவதை அனுபவத்தில் காணலாம்.
ஏனெனில் வெண் கடுகு என்பது எதிர்மறையான சக்திகளை அகற்றி, நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஆற்றல் படைத்தவை. இத்தகைய எளிய பரிகாரத்தை மேற்கொண்டு விற்பனை நிலையத்தில் தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களின் மனதை அறிந்து உழைத்து, உங்களது முன்னேற்றத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM