பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும் 'சாரீ '

Published By: Digital Desk 2

17 Sep, 2024 | 01:59 PM
image

நடிகை ஆராத்யா தேவி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு 'சாரீ ' என பெயரிடப்பட்டு, அதன் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சாரீ' எனும் திரைப்படத்தில் சத்யா யாது , ஆராத்யா தேவி ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

உளவியல் ரீதியிலான திகில் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் ஜி வி ஆர் வி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவி வர்மா தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நாயகன் விரும்பும் பெண்கள் அணியும் பாரம்பரிய ஆடையான சேலையை யாராவது அணிந்திருந்தால் அந்தப் பெண்ணை கொலை செய்கிறார் நாயகன். இதன் சுவராசியமான பின்னணி என்ன என்பதுதான் இப்படத்தின் கதை.

இதனை உணர்த்தும் வகையில் கிளர்வோட்டத்தில் நாயகியின் கவர்ச்சியான காட்சிகளும், நாயகனின் மிரட்டும் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

மேலும் இந்தத் திரைப்படத்தில் ராம் கோபால் வர்மா இணைந்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right