நாட்டில் இவ்வருடத்தின் ஜனவாரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (16) வரையான காலப்பகுதிக்குள் 38,167 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 17 டெங்கு நோய் மரணங்கள் பதிவாகியுள்ளன.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 9,481 ஆகும்.
இந்நிலையில், கம்பஹா மாவட்டத்திலிருந்து 4,390 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 2,102 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாகாணங்களின் அடிப்படையில், மேல் மாகாணத்திலிருந்து 15,973 டெங்கு நோயாளர்களும், வட மாகாணத்திலிருந்து 4,742 டெங்கு நோயாளர்களும், மத்திய மாகாணத்திலிருந்து 3,904 டெங்கு நோயாளர்களும், வடமேல் மாகாணத்திலிருந்து 2,527 டெங்கு நோயாளர்களும், தென் மாகாணத்திலிருந்து 2,836 டெங்கு நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 3,883 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஜனவாரி மாதத்தில் 10,417 டெங்கு நோயாளர்களும், பெப்ரவரி மாதத்தில் 6,007 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 3,615 டெங்கு நோயாளர்களும், ஏப்ரல் மாதத்தில் 2,234 டெங்கு நோயாளர்களும், மே மாதத்தில் 2,647 டெங்கு நோயாளர்களும், ஜூன் மாதத்தில் 3,319 டெங்கு நோயாளர்களும், ஜூலை மாதத்தில் 4,506 டெங்கு நோயாளர்களும், ஆகஸ்ட் மாதத்தில் 3,897 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM