வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திய ஆதரவாளர் கைது

17 Sep, 2024 | 01:36 PM
image

நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்ட வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் கடந்த 15 ஆம் திகதி நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் சென்று அங்கிருந்த இளைஞன் ஒருவனுக்கு வேட்பாளர் கையேட்டை கொடுக்க முயன்ற போது அந்த இளைஞன் குறித்த கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

காயமடைந்த இளைஞன் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று பின்னர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் நேற்று (16) முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான ஜனாதிபதி வேட்பாளரின் ஆதரவாளரை கைது செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த வேட்பாளர் கையேடுகள் பகிரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36