விஜய் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனும் திரைப்படம் ,கலவையான விமர்சனங்களை பெற்று வணிக ரீதியான வெற்றியை பெற்றிருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் வெற்றியை பெறாததால் ( இதுவரை படத்தின் பட்ஜட்டான இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாயை வசூலிக்காததால்) விஜய் மீது திரையுலக வணிகர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விஜயின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', ' நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 'தளபதி 69' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரிக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் ஜெகதீஷ் பழனிச்சாமி மற்றும் என் கே லோஹித் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்கள்.
மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தளபதி விஜய் - ஹெச். வினோத் கூட்டணியில் தயாராகும் 'தளபதி 69 ' எனும் திரைப்படம் விஜயின் திரையுலக பயணத்தில் அவர் அறிவித்தது போல் இறுதி படம் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே இயக்குநர் ஹெச். வினோத் சில மாதங்களுக்கு முன் 'உலக நாயகன்' கமல்ஹாசன் கதையின் நாயகனாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' என பெயரிடப்பட தீர்மானித்த படத்திற்கான கதையை விஜய்க்காக சில மாற்றங்களை செய்து 'தளபதி 69' படத்தை இயக்கவிருவதாக திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் , இந்த திரைப்படத்தின் அறிவிப்பில் ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி இருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த திரைப்படம் விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமிடம் படைப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM