சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதுடன் மட்டுமல்லாமல் அவர் பங்கு பற்றும் விழாக்களையும் இணையத்தில் வைரலாகும் இணையற்ற ஆற்றல் படைத்தவர்.
அதிலும் அவர் திரைப்பட விழா தொடர்பான நிகழ்வுகளில் பங்கு பற்றி நிகழ்த்தும் உரையில் இடம்பெறும் 'குட்டிக்கதை' அனைத்து தரப்பு ரசிகர்களிடையே பிரபலமானது.
இந்நிலையில் விரைவில் இது போன்றதோர் குட்டிக்கதை கிடைக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.
இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரானா டகுபதி, பகத் ஃபாஸில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் இருபதாம் திகதியன்று சென்னையில் உள்ள நேரு விளையாட்டு உள்ரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் படத்தின் நாயகனான சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கு பற்றுவார் என்றும், அதன் போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் குட்டிக்கதை சொல்வார் என்றும், அந்த குட்டிக்கதை விரைவில் தமிழக அரசியலில் அறிமுகமாக இருக்கும் தளபதி விஜய்க்கு அனுபவ உரையை பகிர்ந்து கொள்வது போல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருப்பதால் இந்த விழா குறித்த எதிர்பார்ப்பு உலக தமிழர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM