ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் பின்னர் வன்முறை குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் - பொதுமக்கள் பதற்றமடையக்கூடாது என பவ்ரல் வேண்டுகோள்

17 Sep, 2024 | 11:01 AM
image

 ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான  வன்முறைகள் குறித்த பதற்றமடைவதை  பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுமக்கள் அமைதியாகயிருக்கவேண்டும் தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்திற்கு பலியாக கூடாது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் வன்முறைகள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து  எங்களிற்கு எந்த தகவலும் கிடைக்கிவில்லை என தெரிவித்துள்ள அவர் வன்முறைகள் அமைதியின்மை குறித்த பல தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை,அதனை எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் அனைவரையும்  பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,அனைத்து பிரஜைகளும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வது தேர்தல் வேட்பாளர்களின் கௌரவத்திற்கும்,தேர்தல் நடைமுறைக்கும் அவசியமான விடயம் என ரோஹண ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.

18 ம் திகதிக்கு பின்னர் அனைத்து பிரச்சாரங்களும் நிறுத்தப்படவேண்டும்,18 ம் திகதிக்கு பின்னர் சமூக ஊடக பிரச்சார நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சமூக ஊடக பக்கங்களிற்கும் இது பொருந்தும், மீறல்களளில் ஈடுபடுபவர்கள் சட்டநடவடிக்கைகளை எதிர்கொள்வேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் எலான் மஸ்கின் “ஸ்டார்லிங்க்” இணைய...

2025-03-24 15:44:19
news-image

மேர்வின் சில்வா உட்பட மூவரின் விளக்கமறியல்...

2025-03-24 15:45:50
news-image

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன...

2025-03-24 15:41:21
news-image

மன்னார் பெண் தொழில்முனைவோருக்கு ஜப்பான் மற்றும் ...

2025-03-24 15:10:30
news-image

3 புதிய வெளிநாட்டுத் தூதுவர்களின் நற்சான்றிதழ்...

2025-03-24 15:09:32
news-image

பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன்...

2025-03-24 14:52:35
news-image

யாழ். மாநகர வேட்புமனு  நிராகரிப்புக்கு எதிராக...

2025-03-24 14:46:15
news-image

தலதா மாளிகை குறித்து சமூக ஊடகங்களில்...

2025-03-24 14:49:00
news-image

விபத்துக்குள்ளான விமானத்தில் எவ்வித கோளாறும் இல்லை...

2025-03-24 14:39:52
news-image

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-03-24 13:59:27
news-image

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு கல்முனையில்...

2025-03-24 14:05:28
news-image

காசநோயால் கடந்த வருடம் 9 பேர்...

2025-03-24 13:21:36