எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடலில் இன்று செவ்வாய்க்கிழமை (17) ஈடுப்படவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்றைய தினம் காலை தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் சர்வதேச கண்காணிப்புக் குழுவுக்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.
சுதந்திரமான தேர்தல்களிற்கான ஆசிய வலையமைப்பு (ANFREL) மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு (COG) ஆகியவை கலந்துரையாடலில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை சந்திக்கின்றனர்.
இதேவேளை, பெப்ரல் அமைப்பு (PAFFREL) ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் இறுதி வாரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளது.
பகிரப்படும் சில போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM