தமிழ் திரையுலகின் பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டார் நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'கார்த்தி 29' என தற்காலிகமாக பெயரிடப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
'டாணாக்காரன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர் .பிரகாஷ் பாபு & எஸ். ஆர். பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இவர்களுடன் இஷான் சக்சேனா , சுனில் ஷா, ராஜா சுப்பிரமணியன் ஆகியோர் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்கள்.
இந்தத் திரைப்படத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக தோற்ற புகைப்படத்தில் கருப்பு வெள்ளை வண்ணத்திலான கப்பல் ஒன்றும் இடம் பிடித்திருக்கிறது.
இதன் மூலம் இந்த திரைப்படம் கடலும், கடல் சார்ந்த வாழ்வியலையும் உணர்வுபூர்வமாக விவரிக்கும் படைப்பாக இருக்கலாம் என்ற அவதானிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கார்த்தி, தமிழ் கூட்டணியில் முதன்முறையாக உருவாகும் இந்த 'கார்த்தி 29' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே உறவுகளின் வலிமையை முன்னிறுத்தி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் 'மெய்யழகன்' எனும் திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM