எம்மில் சிலர் தற்போது துரித உணவுகங்களில் விற்பனை செய்யப்படும் வெண்ணெய்யும், கோழி இறைச்சியையும் இணைத்து பதப்படுத்தி தயாரிக்கப்படும் ஷெவர்மா என்ற உணவு வகையையும், கோழி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சியால் தயாரிக்கப்படும் துரித உணவுகளையும் விரும்பி பசியாறுகிறார்கள்.
இவர்களில் சிலருக்கு இத்தகைய பிரத்யேக உணவுகளை பசியாறிய பின் அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக இவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் போது வைத்தியர்கள் இவர்களுக்கு சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் ஒரு வகையினதான பாக்டீரியா தொற்றால் ஏற்பட்டிருக்கும் இரைப்பை குடல் அழற்சி பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள் என விளக்கமளித்து, அதற்குரிய சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருகிறார்கள்.
சிகெல்லா தொற்று என்பது சிகெல்லா எனப்படும் பாக்டீரியாவின் தொற்று பாதிப்பாகும்.
இதன் முக்கிய அறிகுறி வயிற்றுப்போக்கு, சிலருக்கு ரத்தத்துடன் கூடிய மலம் வெளியேறுதல் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
இத்தகைய பாதிப்பு ஐந்து வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு பெரும்பான்மையாக ஏற்பட்டாலும் இது எந்த வயதினரையும் எந்த தருணத்திலும் தாக்கக்கூடிய பாதிப்பு என வைத்தியர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அடிவயிற்று வலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் ஏற்படுத்தும் இத்தகைய பாதிப்பு பெரும்பாலும் ஒரு வார காலத்திற்கு நீடித்திருக்கும். அதற்குள் வைத்தியர்களை சந்தித்து இதற்கான நவீன மருத்துவ தொழில்நுட்பங்களுடன் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்தியல் சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் பெற வேண்டும்.
கெட்டுப்போன உணவு, கெட்டுப்போன இறைச்சியில் தயாரிக்கப்பட்ட உணவு, மலம் கழித்த பிறகு சரியாக கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளாத நிலை, அசுத்தமான நீர் அருந்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய பாக்டீரியாக்கள் எம்முடைய உடலுக்குள் சென்று பாதிப்பை உண்டாக்குகிறது.
இது சில தருணங்களில் தொற்று நோயாகவும் பரவக்கூடிய ஆபத்து உண்டு. இதனை உடனடியாக அவதானித்து சிகிச்சை பெறாவிட்டால் நீர் சத்து குறைபாடு, வலிப்பு, மலக்குடல் தீவிர பாதிப்பு, சிறு நீர்ப் பாதை தொற்று பாதிப்பு, ரத்த ஓட்ட பாதை பாதிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
கைகளை எப்போதும் சுத்தப்படுத்தி வைத்துக் கொள்வது, குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் டயாபரை முறையாக அகற்றி சுத்தப்படுத்துதல், குடிநீரை காய்ச்சிய பிறகு அருந்துதல் போன்ற வைத்தியர்கள் பரிந்துரைக்கும் தற்காப்பு முறையை உறுதியாக பின்பற்றினால் இத்தகைய பாக்டீரியா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
வைத்தியர் முத்துக்குமார்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM