தவறாக வழிநடத்தி அரகலய போராட்ட காணொளிகளை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை - பொலிஸ் எச்சரிக்கை

Published By: Digital Desk 3

17 Sep, 2024 | 09:51 AM
image

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை  பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் வாகன சோதனைகள் மற்றும் 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காட்சிகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களின் காணொளிகள் சமூக ஊடகங்களில் மீளப் பரப்பப்படுவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த கால நிகழ்வுகளை கொண்ட குறித்த காணொளிகள் தற்போது நடைபெறுவதுபோன்று தவறாக சித்தரித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற, பிழையான காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

அத்தோடு,  தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பிழையான தகவல்களை பதிவிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41