இன்றைய சூழலில் எம்முடைய பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்பித்தலில் அதிக அளவில் பெறு பேறுகள் பெற்று சித்தி அடைய வேண்டும் என்றும், புலமைப்பரிசில்கள் பெற வேண்டும் என்றும் பெற்றோர்கள் பெரு விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.
அதே தருணத்தில் பிள்ளைகள் நன்றாக கல்வி கற்க வேண்டும் என எண்ணும் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கல்வி கட்டணம் செலுத்தி தனியார் பாடசாலையில் கல்வி கற்க வைப்பதுண்டு.
அதே தருணத்தில் வேறு சில பெற்றோர்கள் தங்களது பிள்ளை கல்வி கற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்க வைக்கிறார்கள்.
ஆனால் எம்முடைய பிள்ளைகள் ஆசிரியர்கள் போதிக்கும் அல்லது கல்வி கற்பித்தலில் இருக்கும் சிரமங்களை உணர்ந்து உட்கிரகித்தலில் உள்ள சிரமங்களை உணர்ந்து அடிப்படைக் கல்வி , உயர்கல்வி, பட்டதாரி கல்வி ஆகியவற்றை பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதற்கும், அவர்களுடைய பிறந்த ஜாதகத்திற்கும் தொடர்பு உண்டு.
ஒருவரது கல்வி செழுமையாக நடைபெற வேண்டும் என்றால் அவர்களுடைய ஜாதகத்தில் புதன் பகவானும், சந்திர பகவானும் சுபமாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும்.
லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ இரண்டாம் இடத்தில் சனி இருந்தால் அவர்களுக்கு கல்வி கற்பதில் பாரிய தடைகளும், தாமதங்களும் ஏற்படும். நான்காம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் அவர்கள் உயர்கல்வி கற்பதில் அசவுகரியங்களும், தடைகளும் ஏற்படும்.
ஐந்தாமிடம், ஒன்பதாமிடம், பதினோராம் இடம் ஆகிய இடங்களில் அசுப கிரகங்கள் இருந்தால் அவர்களால் பட்டதாரியாகவோ அல்லது கலாநிதியாகவோ உயர்வதற்கு பாரிய தடைகள் ஏற்படும்.
இதனை நீக்கி குறிப்பாக கல்வியில் எந்த தடையும் இல்லாமல் கல்வி கற்க வேண்டும் என்றால் கல்வி கடவுள் என முன்னிறுத்தப்படும் ஹயக்ரீவரை வழிபட வேண்டும்.
இந்த ஹயக்ரீவரை வியாழக்கிழமைகளில் அவருடைய சன்னதிக்கு சென்று அவருக்கு கோதுமை பாயாசம் அல்லது பச்சை பயிறு பாயாசம் ஆகியவற்றை நிவேதனமாக படைத்து கல்வியில் தடை ஏற்படாமல் சீராக நிறைவு செய்ய வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது உங்களுடைய பிள்ளைகள் ஹயக்ரீவரின் அருள் கிடைத்தவுடன் பாடசாலை கல்வி களில் பெறுபேறு பெறுவதில் முன்னேற்றம் அடைந்து வருவதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் புதன் கிழமைகளில் புதன் ஓரைகளில் தமிழகத்தில் உள்ள திருவெண்காடு எனும் இடத்தில் அருள்பாலிக்கும் ஸ்வதாரேண்யேஸ்வரர் மற்றும் புதன் பகவானின் அபிஷேகத்தையோ ஆலயத்தையோ இணையதளத்தில் பார்வையிட்டு, உங்களின் வீட்டிற்கு அருகே இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள நவகிரகத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு பச்சை வண்ண வஸ்திரத்தை சாற்றி, பச்சை பயிறு பாயசத்தை நிவேதனமாக படைத்து பிரார்த்திக்க வேண்டும். பிறகு அதனை தானமாக வழங்கினாலும் உங்களது கல்வியில் முன்னேற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM