இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

டில்ஷான் இன்று காலை தனது சட்டத்தரணியுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த காரணத்தால் நீதவான் டில்ஷானுக்கெதிரான பிடியாணையை இரத்து செய்துள்ளார்.

இந்நிலையில் டில்ஷானுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

வழக்குகொன்று தொடர்பில் டில்ஷான் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.