நாட்டுக்கு சிறந்த ஜனாதிபதியை தெரிவுசெய்தல்

Published By: Digital Desk 7

17 Sep, 2024 | 08:26 AM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. அதன் முடிவுகளைப் பற்றி நிச்சயமாக எதையும் கூறமுடியாத நிலை. தேர்தல் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரா குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான மும்முனைப்போட்டி என்பது மாத்திரமே நிச்சயம்.

ராஜபக்ச குடும்பத்தின் இளம் வாரிசு உட்பட 35 வேறு வேட்பாளர்களும் கூட போட்டியிடுகிறார்கள். அவர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். தீர்மானம் எதையும் எடுக்காமல் இருக்கும் கணிசமான எண்ணிக்கையான வாக்காளர்கள் இருக்கிறார்கள் போன்று தெரிகிறது. அவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். உண்மையில் " எதிரொலி அறை " (Echo chamber ) கோட்பாடு இந்த தேர்தலில் முழு அளவில் வேலை செய்கிறது.

சமூக ஊடகங்களில் " எதிரொலி அறை " கோட்பாடு என்பது அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் நம்பிக்கைகளை திரும்பத்திரும்ப இடையறாது அபிப்பிராயங்களையும் தகவல்களையும் கூறி மேலும் மேலும் வலுவூட்டுவதாகும். வேறு அபிப்பிராயங்களை அவர்கள் கேட்பதற்ககான வாய்ப்புகள் திட்டமிட்டு மட்டுப்படுத்தப்படுகின்றன.  மறுவார்த்தைகளில் கூறுவதானால் மற்றைய வேட்பாளர்களுக்கு மேலாக குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பவர்கள் தங்களுக்குள்ளும் தங்களைப் போன்றவர்களுடனும் அந்த வேட்பாளரின் வாய்ப்புக்களையே தொடர்ந்து பேசி அவரே வெற்றிபெறப் போகின்றார் என்று ஒரு நம்பிக்கையை தங்களுக்குள் ஏற்படுத்திக்எ கொள்கிறார்கள்.

இந்த நம்பிக்கைகளின் தகுதியை உறுதிசெய்வதில் உள்ள தடங்கல் இலங்கையில் நம்பகத்தன்மையுடையபொதுக் கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் இல்லாததால் மேலும் சிக்கலாகிறது. புகழ்பெற்ற கருத்துக்கணிப்பு நிறுவனங்களைக் கொண்ட நாடுகளில் கூட அவை முன்கூட்டியே கூறுகின்ற முடிவுகள் தேர்தலின் அடிக்கடி இறுதி முடிவுகளை விடவும் வேறுபட்டவையாக அமைந்துவிடுகின்றன.

இந்த ஜனாதிபதி தேர்தல்  கடந்த காலத்தின் எந்தவொரு ஜனாதிபதி தேர்தலிலும் போன்று  இரு பிரதான கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  வேட்பாளர்களுக்கு இடையிலான இரு முனைப் போட்டியாக இல்லாமல் மூன்று வேட்பாளர்களுக்கு இடையிலான மிகவும் நெருக்கமான போட்டியாக அமைந்திருக்கிறது. முன்னைய தேர்தல்களில் மூன்று வீதம் தொடக்கம் ஆறு வீதத்துக்கும் அதிகமாக ஒருபோதும் வாக்குகளைப் பெற்றிராத ஒரு அரசியல் கட்சி திடீரென்று முன்னரங்கப் போட்டிக்கட்சியாக மாறியிருப்பது இந்த தேர்தலின் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

தங்களது ஆதரவாளர்களுக்கும் பொதுவில் நாட்டுக்கும் பயன்களைத் தரத்தவறிய பிரதான அரசியல் கட்சிகளின் சிதறலை இது பிரதிபலிக்கிறது. பிரதான அரசியல் கட்சிகளிடமிருந்து வாக்காளர்கள் விலகிச் சென்றிருக்கின்றமையும் மாற்று கட்சியொன்றுக்கு வாக்களிப்பதற்கு காட்டும் நாட்டமும் மக்கள் பெருமளவில்  தங்களை திருத்திக்கொள்வதற்கு விருப்பம் கொண்டிருப்பதை பிரதிபலிக்கிறது.

இழந்த வாய்ப்புக்கள்

இலங்கை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த நேரத்தில் கிழக்கின் சுவிட்சர்லாந்து என்று குறிப்பிடப்பட்டது. 1960 களில் இலங்கையின் பொருளாதாரமும் பொதுவில் வாழ்க்கத்தரமும்  சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளின் மட்டத்துடன் ஒப்பிடப்பட்டது. ஆனால் இன்று அந்த நாடுகள் இலங்கையுடன் எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாத அளவுக்கு  சுபிட்சத்திலும் அபிவிருத்தியிலும் உயர்ந்த ஒரு மட்டத்தில் இருக்கின்றன.

1980 களில் இலங்கையை விடவும் பின்னடைந்து நின்ற வியட்நாம் போன்ற நாடுகள் இப்போது பெருமளவு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுடன் வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் மேம்பட்ட நிலைக்கு வந்துவிட்டன. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இலங்கையின் ஆள்வீத வருமானம் 3,354 அமெரிக்க டொலர்களாக இருந்த அதேவேளை வியட்நாமின் ஆள்வீத வருமானம் 4,164 அமெரிக்க டொலர்களாக இருந்தது. இலங்கையின் தற்போதைய ஆள்வீத வருமானம் பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையில் இருந்து எந்தவகையிலும் வேறுபடவில்லை. அதேவேளை பொருட்களின் விலைகள்  இரண்டு, மூன்று மடங்காக அதிகரித்துவிட்டன.

2022 ஆம் ஆண்டில் இலங்கை அனுபவித்த பொருளாதார வீழ்ச்சியும்  அதைத் தொடர்ந்து மூண்ட அறகலய மக்கள் போராட்டமும் தேசிய மக்கள் சக்தியின் திடீர் வளர்ச்சிக்கு முற்றிலும் காரணமாகும். பிரதான அரசியல் கட்சிகள் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நாடு வங்குரோத்து நிலையை அடைவதிலிருந்து பாதுகாப்பதற்கும் தவறியமையையே பொருளாதார வீழ்ச்சி பிரதிபலித்துநின்றது . 

அறகலய போராட்டத்தின்போது " முறைமை மாற்றம் " என்ற பிரதான சுலோகம் ஊழலுக்கு முடிவு கட்டவேண்டும்  பொருளாதாரக் குற்றங்களைச் செய்தவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைளினால் வலுப்பெற்றது. ஊழலை ஒரு முடிவுக்கு கொண்டு  வரப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்  என்ற இந்த தேர்தலில் மக்களின் மிகவும் முக்கியமான செயல் நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. நாட்டின் செல்வத்தை சூறையாடியவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிக்கிறார்களா அல்லது குறைந்தபட்சம் புதிய தலைவர்களாவது ஊழல் செயற்பாடுகளை விட்டொழித்து ஊழல்  மீண்டும் தலையெடுக்காமல் இருக்க  உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்களா என்பதை காண மக்கள் காத்திருப்பார்கள்.

வருமானங்களுடன் செலவினங்களை சமநிலைப்படுத்த நீண்டகாலமாகத் தவறியமையே இலங்கையின் பின்னடைவுக்கான மூலவேர்க் காரணியாகும். தேர்தல் போட்டியின் தன்மை நாட்டினால் கட்டுப்படியாகக் கூடியதை விடவும் கூடுதலான பொருளாதாரப் பயன்களை மக்களுக்கு தருவதாக வாக்குறுதியளிப்பதற்கு அரசியல் உந்தித் தள்ளியது. சந்திரனில் இருந்தாவது அரசியைக் கொண்டுவருவதாக அளித்த வாக்குறுதி மக்களுக்கு உணவளிக்க வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெறமுடியும் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததேயாகும்.

வேலையில்லாதவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கியது. அத்துடன் பொருளாதார ரீதியில் பயன்தராத திட்டங்களுக்கு மானியங்கள் கொடுக்கப்பட்டன. ஒரு காலத்தில் இலங்கை மக்கள் உயர்ந்த ஆள்வீத வருமானங்களைக் கொண்டிருந்த ஏனைய பல நாட்டு மக்களையும் விட  உயர்ந்த உடல் தகுதியைக் ( High physical quality )  கொண்டிருந்தார்கள். ஆனால் அது நிலைபேறானதாக இருக்கவில்லை. வருமானத்தை மீறிச் செலவு செய்ததன் விளைவுகள் 2022 ஆண்டில் வெளிப்படையாகத் தெரியவந்தன.

சேர்ந்து செயற்படுதல் 

மிகவும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  கையிருப்புக்கு மேல் செலவு செய்வதற்கான  பிரதான காரணமாக இருந்துவரும் மட்டுமீறிய ஊழலே அதீதமாகச் செலவுசெய்யும் அரசாங்கத்தின் பிரச்சினையை மேலும் மோசமாக்குகிறது. அறகலய காலப்பகுதியின் " முறைமை மாற்றத்துக்கான " அழைப்பு (நாட்டின் நிதி வங்குரோத்துக்கும் ஆளும் அரசியல்வாதிகளினாலும்  அவர்களின்  உடந்தையாளர்களினாலும் பொருளாதாரம் சூறையாடப்படுவதன் விளைவுகளுக்கும் இடையிலான தொடர்பை மக்கள் விளங்கிக்கொண்ட நிலையில் )தொடருகிறது.

இன்று ஊழலுக்கு பொதுமக்களும் கூட உடந்தையாகச் செயற்படுகின்ற அளவுக்கு இன்று ஊழல் சமூக முறைமையுடன் பின்னிப்பிணைந்ததாக மாறியிருக்கிறது. கடந்த காலத்தில் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இருந்து மிகவும் தொலைவில் இருந்துவந்த தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கவேண்டும் என்று மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கும் விருப்பம்  சமூகத்துடன் பிணைந்துவிட்ட ஊழலை அவர்கள் நிராகரிப்பதன் அறிகுறியேயாகும்.

இலங்கையின் அரசியல் தலைவர்கள் அரசியல் சமுதாயத்தை பிளவுபடுத்தாமல் ஐக்கியப்பட்ட முறையில் பல்லின, பலமத சனத்தொகையை ஆட்சிசெய்யக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சுதந்திரத்தின்போது நாடு கிழக்கின் " சுவிட்சர்லாந்து " என்று குறிப்பிடப்பட்டது.  

ஆனால் நடந்ததோ வேறு. அடுத்துவந்த தசாப்தங்களில் இன,மத மோதல்களுக்குள் நாடு தள்ளப்பட்டு பயங்கரவாதம் வளர்ந்து போராக மாறி மனித உயிர்களும்  பொருளாதார வளங்களும் கோரமான முறையில் விழுங்கப்பட்டன. இதனால் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் தென்கொரியா போன்று இலக்கையையும் அபிவிருத்திப் பாதையில்  அழைத்துச் சென்றிருக்கக்கூடிய வெளிநாட்டு முதலீடுகளின் வருகை தடைப்பட்டது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் தெரிவு கடந்த காலத்தின் இந்த தோல்விகளை எல்லாம் வெற்றிகொள்ளத்தக்க தீர்மானங்களை எடுக்கும் ஆற்றலையும் விருப்பத்தையும் கொண்ட ஒரு தலைவராக இருக்கவேண்டியதே அவசியமாகும்.

மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் புதியதொரு பாதையில் நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆற்றலுடன் தங்களுக்கே உரித்தான வெவ்வேறு வழிகளில் தனித்துவமான தலைவர்களே. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரித்தான வழியில் ஊழல் மற்றும் வன்முறை மரபுகளைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சூழ இருப்பவர்களும் அவ்வாறே. நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு அதை அரசியல், இன, மத மற்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படுத்துவதற்கான பற்றுறுதியை இந்த தலைவர்கள் வெளிக்காட்டவேண்டியது  அவசியமானதாகும். 

அறிவார்ந்த முதலீட்டு நோக்கங்களுக்கு மாத்திரமன்றி நுகர்வு நோக்கங்களுக்காக கடன்கள் பெறப்படுவதை உறுதிசெய்வதற்கு தேசிய வருமானங்களுக்கும் செலவினங்களுக்கும் இடையிலான பொருத்தமின்மையை அகற்றவேண்டும். இரண்டாவதாக ஊழல் பிரச்சினைக்கு தீராவுகாணவேண்டும். மீண்டும் ஊழலுக்குள் சிக்குப்படக் கூடாது. 

மூன்றாவதாக கடந்தகால காயங்களைக் குணப்படுத்தக்கூடிய ஒரு  முறையிலும் சுவிட்சர்லாந்தைப் போன்று சகல சமூகங்களும் வாய்ப்புக்களை அனுபவிக்கக்கூடியதாக இன, மத நெருக்கடிகளுக்கு தீர்வுகளைக் காணக்கூடியதாக இருக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் தேர்தல்கள் - முக்கிய அம்சங்கள்

2024-10-09 15:56:40
news-image

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில்...

2024-10-09 15:16:10
news-image

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

2024-10-09 15:10:57
news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-09 12:56:00
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39
news-image

இந்திய அணுகுமுறை மாறுகிறதா?

2024-10-06 16:02:59