நானுஓயாவில் சொகுசு கார் விபத்து : சாரதி காயம்

16 Sep, 2024 | 06:27 PM
image

(செ.திவாகரன் நானுஓயா நிருபர்)

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயா - வெண்டிகோனர் பகுதியில் இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பணியாற்றும் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது 34 வயதுடைய காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அல்லது சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36