(எம்.ஆர்.எம்.வசீம்)
ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவது உறுதி. அதனால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதில்லை. அதனால் நாட்டில் இருக்கும் முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு செல்ல முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலுக்கு பி்ன்னர் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் இதனால் நாடு ஸ்திர தன்மையற்ற நிலை ஏற்டும் என்ற அச்சத்தில் நாட்டில் இருக்கும் முதலீட்டாளர்கள் பலர் நாட்டைவிட்டு செல்ல தீர்மானித்திருப்பதாகவும் அதேபோன்று நாட்டில் இருக்கும் பெரும் வியாபாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று தங்குவதற்கு ஹோட்டல்களில் அறைகளுக்கு முன்பதிவு செய்திருப்பதாகவும் புளூம் வேர்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் இந்த நிலையே ஏற்படும் என்ற அச்சம் இருக்கிறது. என்றாலும் தேசிய மக்கள் சக்தியின் வெளிப்படையான நிலைமையை அறிந்தே இவ்வாறு செய்திகள் வெளியிடப்படுகின்றன.
மக்கள் விடுதலை முன்னணியின் வரலாறு இந்த நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் 21ஆம் திகதிக்கு பின்னர் அவ்வாறான எந்த விடயமும் ஏற்படப்போவதில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவே வெற்றிபெறப்போகிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு எவ்வாறு மக்களை அழைத்து வருகிறார்கள் என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
கிராமங்களில் இருக்கும் அவர்களின் ஆதரவாளர்களை நாட்டில் இடம்பெறும் பிரதான கூட்டங்களுக்கு பஸ்களில் அழைத்து செல்கின்றனர்.
அதேநேரம் மிகவும் சிறிய நிலப் பரப்பில் அவர்கள் கூட்டங்களை ஏற்பாடு, பாரியளவில் மக்கள் கலந்துகொண்டிருப்பதுபோல் காட்டுகிறார்கள்.
அத்துடன் இவர்களின் தேர்தல் பிரசாரம் தற்போது தோல்வி கட்டு வருகிறது. இவர்களுக்கு இருந்துவந்த ஆதரவு குறைவடைய ஆரம்பித்துள்ளது.
அதனால் தற்போது இவர்கள் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் ஒருபோதும் அடக்குமுறை கலாசாரத்தை கைவிடுவதில்லை.
அதேநேரம் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிப்பதற்கு சஜித் பிரேமதாசவுக்கும் பசில் ராஜபக்ஷ்வுக்கும் இடையிலான அரசியல் டீல் வெளிப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்ஷவை போட்டியிடவைக்க இறுதி நேரத்திலேயே தீர்மானித்தது. ஏனெனில், ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால். எதிர்காலத்தில் நாமல் ராஜபக்ஷ்வுக்கு அதிகாரத்துக்கு வரமுடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.
அதனால். சஜித் பிரேமதாசவுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்கே நாமல் ராஜபக்ஷ்வை போட்டியிடவைக்க தீர்மானித்தனர்.
என்றாலும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க முடியுமான ஒரு வேட்பாளரும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM