செல்லுபடியற்ற சாரதி அனுமதிப்பத்திரத்துடன் காரை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மீரிகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 46 வயதான தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கண்டியில் இருந்து குளியாப்பிட்டிய கந்தானேகெதர பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றை நோக்கி காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது குருணாகல் போக்குவரத்து பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது தேரர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குருணாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM