நாவலப்பிட்டி பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்ட வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் சிலர் நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் சென்று அங்கிருந்த இளைஞன் ஒருவனுக்கு வேட்பாளர் கையேட்டை கொடுத்துள்ளனர்.
இதன்போது இளைஞன் அந்த கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். பின்னர், அந்த ஆதரவாளர்கள் இளைஞனை பலமாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, காயமடைந்த இளைஞன் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இளைஞனை தாக்கும் காட்சிகள் அனைத்தும் அவ்வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட இளைஞன் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM