ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் எமது திருகோணமலை மண்ணை பறித்தவர்களே என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை வெலிக்கடை தியாகிகள் கடற்கரை அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது ரணில், அநுர, சஜீத் போன்றவர்களின் ஆசனத்தை பெறுவதற்கல்ல. சமஷ்டி தீர்வு கோரியும் 75 வருட கால பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைத்துமே ஆகும்.
திருகோணமலை மண்ணுக்கு பல வரலாறுகள் உண்டு. இலங்கைக்கு சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடி ஏற்றிய 22 வயது இளைஞன் நடராசா சுட்டுக் கொல்லப்பட்டார்.
1956இல் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு தந்தை செல்வாவினால் இங்கு தான் நடாத்தப்பட்டது. அதன்போது இணைந்த வடகிழக்கின் தலைநகரமாக திருகோணமலையை அறிவித்திருந்தார்.
அப்போது கூட சமஷ்டியை வலியுறுத்தியே பேசியிருந்தார். 1977க்கு முன்பு பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை. 1977க்கு பின்பு சேருவில எனும் தொகுதியை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் லீலாரத்ன என்னும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
2009 மே 18இல் நடைபெற்ற போரின்போது நடந்த சம்பவம் பற்றி பல சர்வதேச நாடுகளுடனும் இந்தியாவுடனும் பேசியிருந்தோம். ஒன்றும் நடக்கவில்லை. இவ்வாறு ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் தடுத்தவர்களே வெட்கமில்லாமல் வாக்கு கேட்கின்றார்கள். அதற்கு சில தமிழ் தேசியத்தில் உள்ளவர்கள் சோரம் போகின்றார்கள்.
அரியநேந்திரனுக்கு அளிக்கும் வாக்குகள் எனக்கல்ல, அது உங்களுக்கானது. ஒவ்வொரு புள்ளடியும் உங்கள் தலையெழுத்தை தீர்மானிக்கும். சங்கு சின்னத்துக்கு மாத்திரம் வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். இன்னும் சில நாட்களில் பொய் வதந்திகள் வரலாம். அதனை நம்பி ஏமாற வேண்டாம். செயற்கை நுண்ணறிவு மூலமாக எனது படத்தை பயன்படுத்தி போலியான பிரச்சாரங்களை முன்வைத்து செயற்படுவார்கள். எதையும் நம்ப வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM