அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் மே முதலாம் வாரத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த பணிப்பகிஷ்கரிப்புக்கு ஏனைய 8 தொழிற்சங்கங்கள் தற்போதுவரை ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.