வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது - இளைப்பாறிய பொலிஸ் அத்தியட்சகர் எச்.யூ. பியனந்த

Published By: Digital Desk 7

16 Sep, 2024 | 03:02 PM
image

இன்னும் ஆறு நாட்களில் இந்நாட்டின் ஜனாதிபதியாக எவரை நியமித்துக்கொள்ள வேண்டுமென்பதை பெரும்பான்மையான மக்கள் தீர்மானித்து விட்டார்கள். அதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஏனைய பிரதான வேட்பாளர்கள்  பலவிதமான வன்செயல்களுக்கு தூபமிட்டு வருகிறார்கள். எனினும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் மிகுந்த கவனத்துடன் கீழ் மட்ட அங்கத்தவர்கள் வரை வார்த்தையால் கூட எந்தவிதமான துன்புறுத்தலையும்  புரியவேண்டாமென வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு இருக்கையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பிரதான அலுவலகத்திற்கும் பம்பல தேர்தல் அலுவலகத்திற்கும் கறுப்பெண்ணெய்  வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது என இளைப்பாறிய பொலீஸ் அத்தியட்சகர் எச்.யூ. பியனந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அதற்கு மேலதிகமாக கடந்த வெள்ளிக்கிழமை (13) மொனறாகலையில் நடைபெற்ற எமது கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் நிறைந்த பஸ் வண்டி மீது  புத்தல, மஹபொடயாய  பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தின் முன்னால் வைத்து  தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்றளவில் தேசிய மக்கள் சக்தியை சுற்றி மக்கள் திரண்டுவருவதை தாங்கிக்கொள்ள முடியாமலேயே இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறார்கள். எமக்கு இதுபற்றி அறிவித்ததும்  புத்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  அறிவித்து இது சம்பந்தமாக வெளிப்படைத்தன்மை கொண்ட விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு அறிவித்தோம்.

நாங்கள் எதிர்பார்ப்பது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலாகும். அவர்கள் எமது  கூட்டமைவைச் சேர்ந்த மூவரைத் தாக்கியுள்ளதோடு  அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குகிறார். அவருக்கு ஆறு  தையல்கள்  போடப்படப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த தகவலின்படி சீ.பீ.ஐ. 1077 இலக்கமுடைய அல்ட்டோ காரில் வந்த குழுவினர் மதுபானங்களை பகிர்ந்தளித்து தாக்குதல் நடாத்த தூண்டியுள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில்  சாகர எனும் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு வாக்கு மூலத்தை வழங்கிய வேளையில் மதுபானம் வழங்கி பஸ் வண்டிகளுக்கு தாக்குதல் நடாத்துமாறு அறிவுறுத்தியதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அரசியல்  கட்சியொன்றைச் சேர்ந்தவர் அல்லது குழுவினர் எதேனும் வன்செயலை கட்டவிழ்த்துவிட்டால் பொலிஸார் முறைப்படி செயலாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. புத்தல தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அனைவரையும் கைதுசெய்து  நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறான வன்முறைச்செயல்களை கட்டவிழ்த்துவிட்டு தேசிய மக்கள் சக்தியின்  வெற்றியை கடுகளவேனும் குறைத்துவிட முடியாது.  புத்தல தாக்குதலுடன் தொடர்புடைய  அண்ணன்,  தம்பி ஆகிய பிரதான சந்தேகநபர்கள் பொலிஸில் சரணடைந்துள்ளார்கள். இந்த நாட்டின் அமைதியை விரும்புகின்ற பிரஜைகள்  இவ்வாறான செயல்களுக்கு ஒருபோதுமே  இடமளிப்பார்கள் என்பதை  நாங்கள் நம்பமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41
news-image

கண்டியில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2024-10-10 21:05:05